×
 

ஈரான் கலவரத்தால் இந்தியா தலையில் இறங்கிய பேரிடி!! அதிபர் ட்ரம்ப் அட்டூழியம்!! நமக்கு தான் நஷ்டம்!

ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. இது ஏற்கனவே அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் கடந்த டிசம்பர் இறுதியில் தொடங்கிய மக்கள் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி மற்றும் அரசுக்கு எதிராக மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்தப் போராட்டங்கள் ஈரானின் 31 மாகாணங்கள் மற்றும் 186 நகரங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஈரான் அரசு போராட்டங்களை ஒடுக்குவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தை ஏவி விட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு, கண்ணீர் புகை குண்டுகள், கைது நடவடிக்கைகள் ஆகியவை தீவிரமாக நடக்கின்றன. இதனால் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. 

மனித உரிமை அமைப்புகளின் தகவலின்படி, இதுவரை 654 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர். மேலும் 11,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

ஈரானின் பரம எதிரிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “மக்களை கொன்றால் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் நேரடியாக களமிறங்கும்” என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் அரசை பொருளாதார ரீதியாக முடக்க அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். “இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இது இறுதியானது மற்றும் உறுதியானது” என்று அவர் Truth Social-இல் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் இந்தியாவும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் டாப்-5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த நிதியாண்டில் (2024-25) இந்தியா-ஈரான் இடையே சுமார் 1.68 பில்லியன் டாலர் (சுமார் 14,000 கோடி ரூபாய்) வர்த்தகம் நடந்துள்ளது. இதில் இந்தியாவிலிருந்து ஈரானுக்கு பாசுமதி அரிசி, மருந்துகள், கெமிக்கல்கள், பழங்கள், பயறு வகைகள், இறைச்சி போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்கிறோம்.

குறிப்பாக பாசுமதி அரிசி ஏற்றுமதியில் ஈரான் மிக முக்கிய சந்தையாக உள்ளது. இந்த வரி காரணமாக இந்திய பொருட்களின் விலை அமெரிக்காவில் உயரும். ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25-50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்போது ஈரான் காரணமாக மேலும் 25% சேர்ந்தால், அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 75% வரை வரி செலுத்த நேரிடும். இது ஏற்றுமதியை பெரிதும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இந்தியா ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தி வருகிறது. இது ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் முக்கிய வழித்தடம். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்தியா மறுத்துள்ளது. இந்த பின்னணியில், ரஷ்யா-ஈரான் தண்டனை என்ற பெயரில் இந்தியாவையும் அமெரிக்கா தண்டிப்பதாக சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே இழுபறியில் உள்ள நிலையில், இந்த 25% வரி புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
 

இதையும் படிங்க: ஈரானுடன் பிசினஸ் வச்சிக்கிட்டா 25% வரி!! ஆட்டத்தை ஆரம்பித்த ட்ரம்ப்!! அதிகரிக்கும் பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share