×
 

இனி மகளிர் தொகை ரூ.2000..! 5 முக்கிய தேர்தல் வாக்குறுதி கொடுத்த EPS..!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.

2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்தார். இதனிடையே சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முதற்கட்ட வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். மகளிர் உரிமைத்தொகை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குலவிளக்கு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க: எங்க வாத்தியாரு..! எம்ஜிஆர் பிறந்த நாள்... மரியாதை செலுத்திய இபிஎஸ்..!

வீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி வீடு கட்டி தரும் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளார். 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஐந்து லட்சம் மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: எங்கள் தங்கம் MGR... சதி திட்டங்களை தவிடு பொடியாக்குவோம்..! EPS சூளுரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share