என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!
மீண்டும் என் டி ஏ கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல்களை நோக்கி தீவிரமாகத் தயாராகும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக நடத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (என்.டி.ஏ) தனது கட்சியை விலக்கிய அறிவிப்பு, அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் என்ற திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை வழிநடத்தும் இல்லை என்றும் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். டிடிவி தினகரன் தொடர்ந்து விஜயின் அரசியல் குறித்து பேசி வருகிறார். விஜயின் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விஜய் தலைமையில் மாபெரும் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.
இந்த நிலையில், மீண்டும் என் டி ஏ கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளித்தார். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதற்கான பதிலை கூறி வருகிறேன் என அப்போது தெரிவித்தார். அண்ணாமலையை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் போனா நானும் போகனுமா?... அண்ணாமலையை சந்தித்த பின் டோட்டலாக மாறிய டிடிவி தினகரன்...!
நானும் அவரும் நல்ல நண்பர்களாக இருப்பதன் காரணத்தினால் அவரை சந்தித்து பேசியதாக தெரிவித்தார். அண்ணாமலை சந்திப்பிற்கு பின்னர் பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணையுள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக ஏற்க மாட்டோம் என டிடிவி தினகரன் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையில் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைமையில் 3வது கூட்டணி... NDA- வுக்கு பின்னடைவு... டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி...!