×
 

சம்மன் கொடுத்தும் வரல! தவெக நிர்மல் குமார் எங்கே? வலைவீசி தேடிவரும் போலீஸ்...!

தவெக நிர்வாகி நிர்மல்குமார் எங்கே என அவரது உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் கோரச் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை இல்லாமல் மரணம் விளைவித்தல், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அஜாக்கிரதையாக செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியானது. கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.

இதற்கிடையில் தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: விஜய் பேசும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதா? ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி…!

விஜய் கரூர் பிரச்சார சம்பவம் தொடர்பாக நிர்மல்குமாருக்கு சம்மன் அனுப்பிய நிலையில் சென்னையில் நிர்மல்குமாரின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உதவியாளர் சதீஷின் செல்போனை ஆய்வு செய்த கரூர் போலீசார் நிர்மல்குமார் கடைசியாக எப்போது தொடர்பு கொண்டார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உயிர்கள் போயிருக்கு... அரசியலாக்காதீங்க! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share