திருச்சி காப்பகத்தில் குழந்தைகளுக்கு சித்திரவதை...!! தவெக கடும் கண்டனம்..!!
திருச்சி காப்பக விவகாரம் தி.மு.க அரசின் நிர்வாகச் சீர்கேட்டை காட்டுவதாக தமிழக வெற்றிக்கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 83 சிறுமிகள், அங்கு நடத்தப்பட்ட திடீர் ஆய்வுக்குப் பிறகு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது என்று தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
வசைபாடுதல், உடல்ரீதியான தாக்குதல்கள் மற்றும் மிரட்டல்கள், உணவு மறுப்பு எனப் பிஞ்சு உள்ளங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி நெஞ்சை ரணமாக்குகிறது என்றும் இது ஒரு நிறுவனத் தோல்வி மட்டுமல்ல., ஒட்டுமொத்த தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்று எனவும் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் நலக் குழுவால் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒப்படைக்கப்பட்ட சிறுமிகளுக்கு, அரசு நிதி பெறும் ஒரு நிறுவனத்திலேயே இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்திருப்பது மன்னிக்க முடியாதது என்றும் அரசின் மாதாந்திர மானியத்தைப் பெற்றுக்கொண்டு, அதே அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு இல்லத்தில் குழந்தைகளுக்கு மிரட்டலும், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டது, தி.மு.க அரசு தன் பொறுப்பில் இருக்கும் குழந்தைகளைக் கூடக் காக்கத் தவறிவிட்டதையே காட்டுகிறது எனவும் தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க: இந்த மாதிரி விஷயத்தலாம் கேட்காதீங்க... விஜய் குறித்த கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்..!!
அதிகாரிகள் ஒரு திடீர் ஆய்வு நடத்திய பிறகுதான் இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்து இருப்பதாகவும் அப்படியென்றால், இதற்கு முன்பாக அங்கு வழக்கமான ஆய்வுகள் முறையாக நடத்தப்பட்டனவா அல்லது வெறும் காகித அளவிலேயே ஆய்வுகள் முடிக்கப்பட்டனவா என்ற கேள்வி எழுகிறது என்றும் கூறியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது என்றும் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு நிறுவனம், அராஜகத்தின் கூடாரமாக மாறியிருப்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததா எனவும் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த கேவலமான திமுக அரசுக்கு தேர்தல் தினத்தன்று தகுந்த பாடம் கிடைக்க போவது உறுதி என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: சில சனியன் சகடையால் விஜய் வாழ்க்கையில் பிரச்சனை..!! பி.டி.செல்வகுமார் பரபரப்பு பேட்டி..!