×
 

கரூர் செல்லும் விஜய்... பாதுகாப்பு கொடுங்க... மனு கொடுத்த தவெக...!

கரூர் செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவியது.

போலீஸ் FIR-யில் கூட, அவர் தாமதமாக வந்ததாகவும், போலீஸ் எச்சரிக்கையை கேட்கவில்லை என்றும் குற்றச்சாட்டு பதிவானது. அவருக்கு நெருக்கமான புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் கைது நிலையில் இருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் கூட, இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்று கண்டனம் தெரிவித்து, விஜய்யிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்று கடுமையாகக் கூறியது. இதை அடுத்து தமிழக வெற்றி கழகத்தினர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார். விரைவில் விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவார் என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?

வீடியோ கால் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் உரையாடியதாகவும் கூறப்பட்டது. இதனிடையில், கரூர் செல்ல விஜய் திட்டமிட்டு இருக்கும் நிலையில், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கூறி சென்னை டிஜிபி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அறிவழகன் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING கரூர் செல்கிறார் விஜய்... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் பறந்த முக்கிய கடிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share