×
 

சூடு பிடித்த அரசியல் களம்... அதிருது புதுவை... சூறாவளி பிரச்சாரத்திற்கு கிளம்பிய விஜய்..!!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்ள சென்னையிலிருந்து கிளம்பினார்..

புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார். தவெக ஏற்கெனவே புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 2025இல் உப்பளம் திடலில் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டத்தில் விஜய் புதுச்சேரி மக்களுக்கு குரல் கொடுக்கும் வகையில் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்தார். அப்போது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

கரூர் இடிபாடு சம்பவத்துக்குப் பிறகு அவரது முதல் வெளிப்பொதுக் கூட்டமாக அது அமைந்தது.இம்முறை பிரச்சாரத்துக்கு முன்னதாக, தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை முன்வைத்து புதுச்சேரி காவல்துறை 19 இடங்களுக்கு அனுமதி மறுத்தது. இறுதியில், நான்கு இடங்களில் மட்டும், ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணி நேரம் என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு மணி நேரத்துக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை மொத்தம் 11 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: திரிஷா கூட  விஜய் இருக்கட்டும் ஆனால்... தவெக தலைமைக்கு திமுக வேட்பாளர் பகிரங்க எச்சரிக்கை...!

இன்று தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். திட்டமிடப்பட்ட இடங்களில் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதி (காலை 10 மணி முதல் 11 மணி வரை), கடலூர் சாலை அருகிலுள்ள மால் பகுதி (11 மணி முதல் 12 மணி வரை), தவலக்குப்பம் சந்திப்பு (12 மணி முதல் 1 மணி வரை) ஆகியவை அடங்கும். பிரச்சார வாகனத்தைத் தொடர்ந்து வேறு வாகனங்கள் (உள்பட பைக்) செல்ல அனுமதி இல்லை. அதிகபட்சம் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள், மாணவர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் நேரில் வராமல் சமூக ஊடகங்கள் அல்லது டிவி நேரலை வாயிலாக பார்க்குமாறு தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: விட்டுப்போன வழக்கு விவரம்... தொடரும் சர்ச்சை..! கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் விஜய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share