#BREAKING: காரைக்குடியில் ரோடு ஷோ… ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள் நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்..!
காரைக்குடியில் ரோடு ஷோ சென்றபோது விஜய் சைக்கிள் ஓட்டி சென்றார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழகம், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியது. விஜய் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில, காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை செய்கிறார். இந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய் மதுரை சென்றடைந்தார். மதுரையில் இருந்து விஜய் காரைக்குடிக்கு ரோடு ஷோ நடத்தினார். காரைக்குடியில் ரோடு ஷோ நடத்திய போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டினார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் வாகனத்தில் அதிரடி சோதனை..! தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பு..!!
தொண்டர்கள் அவரை தொடர்ந்து சென்றனர். தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் சைக்கிள் ஓட்டும்போது விஜய் சற்று தடுமாறினார். இருப்பினும் தொண்டர்கள் சூழ மலர் மாலை அணிந்து, சைக்கிள் ஒட்டி விஜய் ரோடு ஷோ நடத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து காரைக்குடியில் விஜய் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார். ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கு நடுவே விஜய் சைக்கிள் ஓட்டி சென்ற நிலையில், கட்டுக்கடங்காத கூட்டத்தால் மீண்டும் தனது பரப்புரை வாகனத்திலேயே விஜய் ஏறினார்.
இதையும் படிங்க: காரைக்குடியில் சூறாவளி பிரச்சாரம்..!! மதுரை சென்றடைந்த விஜய்... தொண்டர்கள் குஷி..!!