×
 

உங்க விஜய் நா வரேன்! தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கான இலட்சினை வெளியீடு...

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்திற்கான இலட்சினை வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய அலை என்று கருதப்படும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கத் தயாராகியுள்ளார். இந்தப் பிரச்சாரப் பயணம், செப்டம்பர் 13 அன்று திருச்சி மாவட்டத்தில் இருந்து தொடங்கி, டிசம்பர் 20 வரை சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

இது த.வெ.க-வின் முதல் அரசியல் சுற்றுப்பயணத்தின் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. விஜய்யின் சுற்றுப்பயணம், மக்களுடன் நேரடி சந்திப்புகள் மற்றும் பொது மக்கள் சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பலூர் மாவட்டம், திருச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களுடன் இணைந்து முதல் வார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விஜய் அந்தந்த மாவட்டங்களின் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி பேசி, கட்சியின் கொள்கைகளைப் பரப்பத் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முத்த மழையில் விஜய்! ரசிகரின் அசரவைக்கும் சம்பவம்...

வரும் 13 ஆம் தேதி முதல் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் நடத்துகிறார். இந்த நிலையில் விஜய் சுற்றுப்பயணத்திற்கான இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. உங்க விஜய் நா வரேன்… வரலாறு திரும்புகிறது என வாசகங்கள் அடங்கிய இலட்சினை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல... வேடிக்கை காட்டும் சிங்கம்! சீமான் செம கலாய்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share