உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 31 பேர் உயிரிழப்பு! மீட்பு பணிகளை துரிதப்படுத்த அரசு உத்தரவு!
சூறாவளிக் காற்றால் தகவல் தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிப்பு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வீசிய அதீத சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்திற்கு இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் பெய்த கனமழையினால் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மின்னல் தாக்குதல் மற்றும் மரம் சரிந்து விழுந்த விபத்துக்களில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலத்த காற்றினால் மின் கம்பங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் சரிந்து விழுந்ததில், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரபிரதேசத்திற்கு எதிராக செயல்படுகிறது திமுக!! அதிக தொகுதிகள் கிடைக்கக்கூடாது என எதிர்ப்பதாக மோடி குற்றச்சாட்டு!
பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா உரிய நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு மாநில முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
துண்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை விரைந்து சீரமைக்கத் தொழில்நுட்பக் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் குறித்து உடனுக்குடன் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜில்லென மாறப்போகும் தமிழகம்..!! வரும் 11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எது தெரியுமா..??