×
 

மீண்டும், மீண்டும் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... கறிக்கடை தொழிலாளி கைது...!

வேடசந்தூரில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் பேக்சோவில் கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், உசேன் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் மன்சூர் அலி(வயது 22), கறிக்கடை தொழிலாளி.  இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி ஒருவரை, தேர்வு முடிந்த அன்ற தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைத்த பின்னர், ஆசை வார்த்தை கூறி தனி அறைக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் மீண்டும் மன்சூர் அலி தொந்தரவு செய்யவே, மாணவி இது குறித்து தனது பெரியம்மாவிடம் தெரிவித்துள்ளார்.

இதையறிந்த மன்சூர் அலி சிறுமிக்கும், பெரியம்மா குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மன்சூர் அலியை கைது செய்தனர். 

இதையும் படிங்க: மீண்டும் திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகள்..!! மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!!

மேலும் உடந்தையாக இருந்த மன்சூர் அலியின் தாயார் பாத்திமா, உறவினர் ஜீனத் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அம்பாசமுத்திரத்தின் செல்லப்பிள்ளைக்கு அடி மேல் அடி... தவெகவிற்கு தாவிய இசக்கி சுப்பையாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share