×
 
☰

5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

திருவொற்றியூரில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை சுட்டிக்காட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.

திருவொற்றியூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த குடும்பத்தின் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கொடூரச் சம்பவத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.

கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்தச் சூழலில், திருவொற்றியூர் சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அரசின் செயல்பாடுகளை மீண்டும் தீவிரமாகக் கேள்விக்குள்ளாக்குவதாக அவர் கூறினார்.

“ஐந்து வயது பெண் குழந்தைக்கே பாதுகாப்பு இல்லையா?” என்றும், “வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்வைத்த கோரிக்கைகளை அரசு இனியும் புறக்கணிக்கப் போகிறதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.குற்றம் நடந்த பிறகு கைது செய்வது மட்டுமே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான அரசின் கடமையா என்றும், குற்றம் நிகழ்வதற்கு முன்பே ஆபத்தை கண்டறிந்து தடுப்பதற்கான கண்காணிப்பு கட்டமைப்பு எங்கே என்றும் அவர் வினவினார்.

இதையும் படிங்க: கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!

தமிழகத்திற்கு வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருவதற்கு எதிரான நிலைப்பாடு தமது கட்சியிடம் இல்லை என்று தெளிவுபடுத்திய அவர், தமிழ்நாட்டில் பணியாற்ற வரும் ஒவ்வொருவரின் அடையாளம், பணியிடம், அவரை அழைத்து வந்தவர், தங்குமிடம், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அரசின் அதிகாரப்பூர்வ பதிவில் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share