VerSe Innovation: AI சக்தியால் 88% வருவாய் வளர்ச்சி.. FY26-ல் இலாபம் நோக்கி பயணம்..!!
இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமும் AI-சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமுமான VerSe Innovation, 88% வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி உள்ளூர் மொழி தொழில்நுட்ப தளமாகவும், AI-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமாகவும் விளங்கும் VerSe Innovation, நிதியாண்டு 2025-ல் (FY25) 88 சதவீத வருவாய் ஈட்டி, நல்ல வளர்ச்சியை காட்டியுள்ளது. இது நிறுவனத்தின் AI-டிரைவன் மானிடைசேஷன், மொபைல் மார்க்கெட் விரிவாக்கம் மற்றும் செயல்பாட்டு திறன் ஆகியவற்றின் விளைவாகும். இதனுடன், EBITDA நஷ்டம் 20 சதவீதம் குறைத்து, FY26-ன் இரண்டாம் பாதியில் நல்ல இலாபத்தை அடையும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
VerSe Innovation-ன் துணைச் சொந்த நிறுவனங்களான Dailyhunt, Josh போன்றவை FY25-ல் சிறப்பாக செயல்பட்டு தனது வருவாயை ரூ.1,930 கோடியாக உயர்த்தியுள்ளது. 2024ம் ஆண்டும் நிதியாண்டில் இதன் வருவாய் ரூ.1,029 கோடியாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது ரூ.1,930 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், இதர வருவாய்களையும் சேர்த்து மொத்த வருவாய் ரூ.1,261 கோடியிலிருந்து ரூ.2,071 கோடியாக 64 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் EBITDA செலவுகள் கடந்தாண்டில் -89 சதவீதம் என்பதில் இருந்து இந்தாண்டு -38 சதவீதம் என குறைந்து ரூ.738 கோடியாக வைத்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: என்னை பழிவாங்குங்கள்… ஆனா…! கரூர் சம்பவம் குறித்து வாய் திறந்த விஜய்…!
இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு AI-அடிப்படையிலான NexVerse.ai தளம் முக்கிய பங்காற்றியுள்ளது. இது விளம்பரதாரர்களுக்கு தரவு-அடிப்படையிலான லாபத்தை உறுதி செய்கிறது. Dailyhunt Premium-ன் Magzter இணைப்பால் சந்தா வளர்ச்சி அதிகரித்துள்ளது. அதேசமயம் Josh-ன் Audio Calling மற்றும் VerSe Collab ஆகியவை கிரியேட்டர்களின் ஈடுபாட்டை வலுப்படுத்தியுள்ளன.
அதுமட்டுமின்றி நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளும் கடந்தாண்டு 77 சதவீதமாக இருந்த நிலையில் அது நடப்பாண்டில் 61 சதவீதமாக குறைந்துள்ளது. உறுதியான நிதி ஆதரவு, AI-first உத்தி மற்றும் 35 கோடி பயனர்கள் என்ற வலுவான தளத்துடன், VarSe இன்னோவேஷன் நிறுவனம் இப்போது இந்தியாவின் அடுத்த கட்ட டிஜிட்டல் வளர்ச்சியை வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
VerSe Innovation-ன் நிறுவனர் மற்றும் CEO உமங்க் சிங் கூறுகையில், “இந்தியாவின் 35 கோடி பயனர்களுடன், உள்ளூர் மொழி உள்ளடக்கத்தை AI மூலம் மேம்படுத்தி, டிஜிட்டல் வளர்ச்சியை வழிநடத்துகிறோம். FY26-ல் இலாபம் என்பது நமது AI-முதல் உத்தியின் சான்று” என்றார். இந்திய டிஜிட்டல் விளம்பர சந்தை 10-15 சதவீத வளர்ச்சியுடன் இருக்கும்போது, VerSe-ன் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட வளர்ச்சி குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மொழி தளங்களின் உயர்வில் VerSe முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது, இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு புதிய உந்துதலாக அமையும்.
இதையும் படிங்க: முடிவு வரட்டும்... அப்ப இருக்கு... கரூர் சம்பவம் குறித்து பொன்முடி ஆவேசம்...!