துணை ஜனாதிபதி தேர்தல் தொடக்கம்! ராதாகிருஷ்ணன் VS சுதர்சன் ரெட்டி… யாருக்கு வெற்றி?
துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்தது. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கட்சிப் பாகுபாடு இன்றி சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சுதர்சன் ரெட்டி உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
இன்று காலை 10 மணிக்கு துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற 392 வாக்குகள் தேவைப்படும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் இருக்கிறது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார்.
இதையும் படிங்க: “ஆளவிடுங்கடா சாமி” - குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ட்விஸ்ட்... 3 முக்கிய கட்சிகள் எடுத்த அதிரடி முடிவு...!
ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சிகள் கூட்டணியின் வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. எதிர்கட்சி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டிக்கு ஆதரவாக 320 வாக்குகள் உள்ளன ஒடிசாவின் விசு ஜனதா தளம், பஞ்சாப்பின் சிரோன் மணி அகாலி தளம், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறது BJD.. ஒடிசாவின் அரசியல் நிலைப்பாடு..!!