இனி பாவமே பாக்காதீங்க! அடிச்சு நொறுக்குங்க… ராணுவத்துக்கு ஃபுல் பவர் கொடுத்த இந்தியா!
போர் ஒப்பந்தத்திற்கு பிறகு அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளதற்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் சண்டை ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. சற்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு முன்பே மீண்டும் தன் அத்துமீறலை பாகிஸ்தான் தொடங்கியது. இந்த நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய மோதல் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், அதனை அந்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி வருவதாகவும் கூறினார்.
இந்திய ராணுவம் இந்த தாக்குதல்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருவதாக கூறிய அவர், இந்த தாக்குதல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் இதற்குப் பாகிஸ்தான் தான் பொறுப்பு எனவும் கூறினார். பாகிஸ்தான் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும், நிலைமை குறித்து ராணுவம் மிகுந்த விழிப்புடன் இருக்கிறது., மேலும் சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் மீண்டும் மீண்டும் நிகழும் அத்துமீறல்களை அதிக பலத்துடன் கையாள ராணுவத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், எந்தவகை தாக்குதலாக இருந்தாலும் தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படுவதாகவும், சர்வதேச எல்லை, எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதுகில் குத்திய கோழை... பாகிஸ்தானுடன் நேருக்கு நேர் சண்டையிட்ட இந்திய வீரர் வீரமரணம்...!
இதையும் படிங்க: இந்தியாவின் கட் அண்ட் கறாரான 3 கன்டிஷன்கள்... விழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்...!