மீண்டும் பதற்றத்தில் மணிப்பூர்!! ஆயுதக் குழுக்களின் தாக்குதல்.. 4 பேர் பலி..!! பீதியில் உறைந்த மக்கள்!!
இந்தத் தொடர் வன்முறை சம்பவங்கள் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கி, விவசாயம், வணிகம் மற்றும் கல்வி போன்றவற்றை பாதித்து வருகின்றன.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், ஆயுதமேந்திய குழுக்களின் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களுக்குள் புகுந்த நாகா பயங்கரவாத குழுக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளன.
திடீர் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. குகி-சோ கவுன்சில் இந்த கொடூரத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது.
“நாகா ஆயுதக் குழுக்களின் எல்லை மீறிய செயல்பாடுகளே வன்முறை மீண்டும் தலைதூக்குவதற்கு முக்கிய காரணம்” என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 22 குகி பழங்குடியின மக்கள் இத்தகைய ஆயுதக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்... தீக்கிரையான கிராமங்கள்... நாகா கிராமங்களை குறி வைத்து கொடூர தாக்குதல்...!
மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு முதல் தொடரும் இனமோதல்கள் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பில் இருந்தாலும், ஆயுதமேந்திய குழுக்கள் எல்லைகளைத் தாண்டி நுழைந்து தாக்குதல் நடத்துவது அடிக்கடி நிகழ்கிறது. இந்தத் தொடர் வன்முறை சம்பவங்கள் உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கி, விவசாயம், வணிகம் மற்றும் கல்வி போன்றவற்றை பாதித்து வருகின்றன.
பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். “ஆயுதக் குழுக்களின் தடையற்ற செயல்பாடுகள் மணிப்பூரை மீண்டும் பெரிய அளவிலான இனமோதலுக்குத் தள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளது. மத்திய அரசும் பாதுகாப்புப் படைகளும் உடனடியாகத் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நீண்டகால அமைதிக்கான அரசியல் தீர்வுகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. உள்ளூர் நிர்வாகமும் பாதுகாப்புப் படைகளும் கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இன்னும் பயத்துடனேயே வாழ்கின்றனர். மணிப்பூரின் அமைதிக்காக அனைத்து தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலித்து வருகிறது.
இதையும் படிங்க: கிரகநிலை சரியில்லை! முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் ஜோதிட பரிகாரமா? ஜோதிடர் பெயரால் புதிய சர்ச்சை!