காரும், பிரதமரும்!! உலக அளவில் கிடைக்கும் முக்கியத்துவம்! மாஸ் காட்டும் மோடி!
தற்போது உலக தலைவர்களுடன் மோடி ஒன்றாக காரில் பயணிப்பது பிரபலமாகி வருகிறது.
புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உலகத் தலைவர்களுடன் காரில் ஒன்றாகப் பயணிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருகின்றன. இது அவரது தனிப்பட்ட நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் வலிமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டின் போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி காரில் ஒன்றாகப் பயணித்தார். அப்போது இரு தலைவர்களும் நெருக்கமாக உரையாடிய புகைப்படங்கள் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன.
சமீபத்தில் புதின் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் ஒரே காரில் பயணித்து சென்றனர். அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பெரிதும் பகிரப்பட்டன.
இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு! ஜோர்டான் நாடுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இதேபோல், நேற்று முன்தினம் ஜோர்டான் அரசுமுறைப் பயணத்தின் போது ஜோர்டான் பட்டத்து இளவரசர் அல் ஹுசேன் பின் அப்துல்லா தானே காரை ஓட்டி பிரதமர் மோடியை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த அரிய காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஜோர்டான் பயணத்தை முடித்துக்கொண்டு எத்தியோப்பியாவுக்கு சென்ற போது, அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் நேரில் வரவேற்று ஆரத்தழுவினார். பின்னர் அபி அகமது தானே காரை ஓட்டி பிரதமர் மோடியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார். இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
உலகத் தலைவர்கள் பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் வரவேற்று காரில் அழைத்துச் செல்வது, இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய செல்வாக்கையும் நட்புறவையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற காட்சிகள் தொடர்ந்து வைரலாவது பிரதமர் மோடியின் தனிப்பட்ட அணுகுமுறைக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்!! ஜோர்டன் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!