×
 

வாக்கு திருட்டுக்கு முற்றுப்புள்ளி!! ராகுல்காந்தி ஆவேசம்! பீகாரில் துவங்கியது வாக்குரிமை பேரணி!!

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குற நிலையில், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்யுறதுல முறைகேடுகள் நடக்குதுன்னு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்காங்க. இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமா மாற்றவும், ஆகஸ்ட் 17, 2025-ல் சசாரம் மாவட்டத்துல “வாக்குரிமைப் பேரணி” (Voter Adhikar Yatra) தொடங்கியிருக்கு. 

இந்த பேரணியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, கன்னையா குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் மூவண்ணக் கொடியை அசைச்சு தொடங்கி வச்சாங்க.

சசாரத்துல நடந்த தொடக்க விழாவில் பேசின ராகுல் காந்தி, “மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்னு கருத்துக் கணிப்புகள் சொன்னது. ஆனா, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிச்சது. எப்படின்னா, திடீர்னு ஒரு கோடி புது வாக்காளர்கள் உருவாக்கப்பட்டாங்க. இது வாக்குத் திருட்டு. 

இதையும் படிங்க: SIR நடவடிக்கைக்கு எதிராக பீகாரில் 16 நாட்கள் யாத்திரை.. நாளை தொடங்குகிறார் ராகுல் காந்தி..!

பீகாரில் இந்த சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பேர்ல புது வாக்காளர்களைச் சேர்த்து, வாக்குகளைத் திருடுறாங்க. இதை நாங்க அனுமதிக்க மாட்டோம்”னு காட்டமா சொன்னார். “இது தேர்தல் பிரச்னை மட்டுமில்லை, இது ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும், ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ன்ன கொள்கையையும் காப்பாத்துற போராட்டம்”னு அவர் வலியுறுத்தினார்.

இந்த பேரணி, 16 நாள்களுக்கு 1,300 கி.மீ தூரம் பயணிச்சு, 23 மாவட்டங்கள், 50 சட்டமன்றத் தொகுதிகள், 29 மக்களவைத் தொகுதிகளை கடந்து, செப்டம்பர் 1-ல் பாட்னாவில் காந்தி மைதானத்துல மாபெரும் பொதுக்கூட்டத்தோட முடியப் போகுது. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதை “மக்கள் இயக்கம்”னு அழைக்குறாங்க. 

தேஜஸ்வி யாதவ், “பிகார் மக்கள் ஏழைகளா இருக்கலாம், ஆனா புத்திசாலிகள். பாஜகவும், தேர்தல் ஆணையமும் வாக்காளர் பட்டியல் மூலமா மக்களோட உரிமைகளைத் திருடுறாங்க. இதை எதிர்த்து மகாகத்பந்தன் போராடும்”னு சொன்னார். லாலு பிரசாத் யாதவ், மருத்துவர்கள் அறிவுரை மீறி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டு, மக்களுக்கு ஆதரவா பேசினார்.

இந்த பேரணிக்கு காரணம், தேர்தல் ஆணையத்தோட சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலமா 65 லட்சம் வாக்காளர்களோட பெயர்கள் பட்டியல்ல இருந்து நீக்கப்பட்டிருக்கு. இதுல 22 லட்சம் பேர் இறந்தவர்கள்னு, 36 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவங்கன்னு, 7 லட்சம் பேர் ஒரு இடத்துக்கு மேல வாக்காளர்களா பதிவு செஞ்சவங்கன்னு தேர்தல் ஆணையம் சொல்றது. 

ஆனா, இந்த நீக்கங்களுக்கு எந்த வெளிப்படையான காரணமும் தரப்படலைன்னு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுறாங்க. உச்சநீதிமன்றமும் ஆகஸ்ட் 14-ல், இந்த 65 லட்சம் பெயர்களையும், நீக்கப்பட்ட காரணங்களையும் மாவட்ட வாரியாக வெளியிட சொல்லி உத்தரவு போட்டிருக்கு.

ராகுல் காந்தி, “கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்து 250 வாக்குகள் முறைகேடா பதிவு செஞ்சு பாஜகவுக்கு ஜெயிக்க வச்சாங்க. இதுக்கு ஆதாரம் இருக்கு”னு சொல்லி, தேர்தல் ஆணையத்தை கடுமையா விமர்சிச்சார். இந்த பேரணி, இந்த குற்றச்சாட்டுகளை மக்களிடம் கொண்டு போய், வாக்குரிமையை பாதுகாக்க முயற்சிக்குது. ஆனா, தேர்தல் ஆணையம், “எந்த கட்சியும் இதுவரை அதிகாரப்பூர்வமா புகார் கொடுக்கலை”னு சொல்லி, இந்த செயல்முறை வெளிப்படையானதுன்னு பாதுகாத்து பேசுது.

இந்த பேரணி, பீகாரில் அரசியல் சூழலை சூடாக்கியிருக்கு. இந்தியா கூட்டணி, “இது ஜனநாயகத்தைக் காப்பாத்துற போராட்டம்”னு சொல்லும்போது, பாஜக, “இது போலி வாக்காளர்களை காப்பாத்த எதிர்க்கட்சிகள் செய்யுற நாடகம்”னு பதிலடி கொடுக்குது. இந்த சர்ச்சை, பிகார் தேர்தலுக்கு முன்னாடி பெரிய அரசியல் புயலை உருவாக்கியிருக்கு. 

இதையும் படிங்க: நாட்டையே இழிவு படுத்திட்டீங்க!! ராகுல்காந்தி, கார்கே ஆப்சன்ட்!! கொந்தளிக்கும் பாஜக!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share