இனிமே தப்பு நடக்காது! ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை.. தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்பு..!
ராகுல்காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரையில் தேஜஸ்வி யாதவ் உட்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார யாத்திரை என்பது இந்தியாவின் தேர்தல் நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மையையும், நியாயத்தையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் முயற்சியாகும். இந்த யாத்திரை, குறிப்பாக பீகார் மாநிலத்தில், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது.
வாக்காளர் அதிகார யாத்திரையின் முதன்மை நோக்கம், தேர்தல் முறைகேடுகளை எதிர்ப்பது மற்றும் வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது. முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சிகளுக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டது. ராகுல் காந்தி இந்த யாத்திரையை அரசியல் சாசனத்தைக் காக்கும் போராட்டம் என்று ராகுல் காந்தி கூறி இருந்தார்.
கடந்த தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக அவர் ஆதாரத்துடன் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த யாத்திரையை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகஸ்ட் 17 அன்று பீகாரின் சசாரம் பகுதியிலிருந்து தொடங்கினார்.
இதையும் படிங்க: மக்கள் உரிமை யாத்திரை... தொண்டர்கள் சூழ ராகுல், தேஜஸ்வி யாதவ் பைக் பயணம்
வாக்குத் திருட்டு உள்ளிட்ட முறைகேடுகள் தேர்தல் முடிவுகளை பாதிக்கக் கூடியவை என்பதால், இவற்றை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த யாத்திரை தொடங்கப்பட்டது. இன்று நடைபெற்ற யாத்திரையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி ஆகியோர் கலந்துக் கொண்டார். பெட்டியாவில் வாக்காளர் அதிகார யாத்திரை சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படிங்க: அரசியல் சண்டையில அவசர சிகிச்சைக்கு போறவங்கள தடுக்கலாமா? செல்வப்பெருந்தகை ஆவேசம்..!