×
 
☰

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இனி பெற்றோர் விவரம் தேவையில்லை! தேர்தல் கமிஷன் திடீர் தளர்வு!

SIR பணிகள் நிறைவடைந்த மாநிலங்களில் 18 வயது இளைஞர்கள் வழக்கமான Form-6 நடைமுறையின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க முடியும்.

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி எனப்படும் SIR முடிவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்தல் கமிஷன் முக்கிய தளர்வை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் முந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களை கட்டாயமாக வழங்க வேண்டிய நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க Form-6 மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை ஆன்லைனிலும், சம்பந்தப்பட்ட அலுவலகத்திலும் சமர்ப்பிக்க முடியும். தேர்தல் கமிஷனின் தற்போதைய Form-6ல் விண்ணப்பதாரரின் பெயர், உறவினர் விவரம், வயது, முகவரி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்படுகின்றன.

இதையும் படிங்க: SIR விவகாரத்தில் தவெக–காங்கிரஸ் இடையே வெடித்த கருத்து மோதல்! கூட்டணிக்குள் சலசலப்பு!

SIR நடைபெற்றபோது, புதிய வாக்காளர்களின் குடும்ப மற்றும் பூர்வீக தொடர்பை சரிபார்ப்பதற்காக, சில மாநிலங்களில் முந்தைய SIR வாக்காளர் பட்டியலில் பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டியின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டிய கூடுதல் நடைமுறை இருந்தது. தற்போது SIR பணிகள் முடிவடைந்த மாநிலங்களில் இந்த கூடுதல் குடும்ப விவரங்களை கட்டாயமாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், SIR பணிகள் நிறைவடைந்த மாநிலங்களில் 18 வயது இளைஞர்கள் வழக்கமான Form-6 நடைமுறையின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க முடியும். தேர்தல் கமிஷனின் வாக்காளர் சேவை இணையதளத்திலும் 18 வயது அல்லது விரைவில் 18 வயதை அடைய உள்ளவர்கள் Form-6 மூலம் புதிய வாக்காளராக பதிவு செய்யும் வசதி தற்போது உள்ளது.

அதே நேரத்தில், SIR பணி இன்னும் நடைபெற்று வரும் மாநிலங்களில் இந்த கூடுதல் சரிபார்ப்பு நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதி உடனடியாக பொருந்தும் என்று கருத முடியாது.

இதற்கிடையே, மகாராஷ்டிராவில் SIR பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களுக்கு மேலும் ஒரு வசதி வழங்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SIR தொடர்பான அறிவிப்புகளுக்கு பதிலளிக்கும் போது தேவையான ஆவணங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பும் நடைமுறை குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் SIR தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவி மைய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு தேர்தல் கமிஷனின் அதிகாரப்பூர்வ வாக்காளர் சேவை தளத்தை பயன்படுத்தலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், விண்ணப்பத்தின் நிலையை அறிதல் உள்ளிட்ட சேவைகளும் அங்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: SIR சர்ச்சையில் புதிய திருப்பம்! ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கு! அடுத்த வாரமே விசாரணை! உச்ச நீதிமன்றம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share