×
 

அவமானமா இருக்கு!! எல்லார்கிட்டயும் கையேந்துறோம்! புலம்பி தவிக்கும் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!!

நானும் ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம் என பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறினார்.

பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியால் தத்தளித்து வரும் நிலையில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மிகுந்த வேதனையுடன் உணர்ச்சிபூர்வமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் ஏற்றுமதியாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், "நானும் ராணுவத் தளபதி ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை அவமானமாக கருதுகிறோம்" என்று தெரிவித்தார். கடன் வாங்குவது தங்கள் சுயமரியாதைக்கு பெரும் சுமை என்றும், வெட்கத்தால் தலைகள் குனிகின்றன என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு சமீபத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் கூறினார். ஆனால் இந்த அதிகரிப்பில் பெரும்பகுதி நண்பர் நாடுகள் மற்றும் உலக நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடன்களே என்று அவர் விளக்கினார். 

இதையும் படிங்க: பாகிஸ்தானை கழட்டிவிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!! இந்தியாவுடன் கைகோர்ப்பு! மோடி போட்ட மேஜிக்!

"கடன் கேட்க செல்லும்போது தலை குனிந்து நிற்க வேண்டிய நிலை உங்களுக்குத் தெரியும்" என்று ஏற்றுமதியாளர்களிடம் கூறிய அவர், "மற்றவர்கள் சொல்லும் பல விஷயங்களுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது" என்று வேதனை தெரிவித்தார்.

பாகிஸ்தான் அரசு தொடர்ந்து சர்வதேச நாணய நிதியம் (IMF), சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் கடன் கோரி வருகிறது. இதற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். 

இந்த நிலை பாகிஸ்தான் மக்களிடையேயும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார வல்லுநர்கள் பாகிஸ்தான் தன்னிறைவு பெறாமல் தொடர்ந்து கடன் சுமையில் இருப்பது நீண்டகால ஆபத்து என்று எச்சரித்து வருகின்றனர்.

ஷெபாஸ் ஷெரீப்பின் இந்த உணர்ச்சிபூர்வமான பேச்சு பாகிஸ்தான் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதை அரசின் தோல்வியாகவும், பொருளாதார தோல்வியை ஒப்புக்கொள்ளும் அறிக்கையாகவும் பார்க்கின்றனர். பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்க தீவிர சீர்திருத்தங்கள் தேவை என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. நாட்டின் எதிர்காலம் கடன் சுமையில் இருந்து விடுபடுவதைப் பொறுத்தே அமையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெண்களை கவர இலவச நாப்கின்!! அதுல எதுக்கு இப்பிடி? தன் கட்சி திட்டத்தையே எதிர்க்கும் மகளிர் காங்கிரஸ்! ஏன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share