×
 

இந்தியாவை சும்மா விடமாட்டோம்!! தாக்கி அழிப்போம்!! கொக்கரிக்கும் பாக்., ராணுவ தளபதி!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் படத்தை சுட்டிக்காட்டி, ''இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைப்போம்; விலை மதிப்பற்ற வளங்களை குறிவைத்து தாக்குவோம்,'' என, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் மூலம் அப்பாவி சுற்றுலாப் பயணிகளை கொலை செய்து பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அரங்கேற்றியது. இதற்கு பதிலடியாக, மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியது. 

இந்தப் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான், “எங்களை விட்டுடுங்க, போரை நிறுத்துங்க”னு கெஞ்சியது. இதையடுத்து இந்தியா தற்காலிகமாக போரை நிறுத்தியது. ஆனா, இப்போ அமெரிக்காவின் பின்புலத்தோடு பாகிஸ்தான் மறுபடியும் இந்தியாவுக்கு எதிரா கொக்கரிக்க ஆரம்பிச்சிருக்கு.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர், அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பின் பேரில், இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றிருக்கார். புளோரிடாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அவர் இந்தியாவுக்கு எதிராக கடுமையான மிரட்டல்களை விடுத்திருக்கார். “சிந்து நதி இந்தியாவோட குடும்ப சொத்து இல்லை. அதுல இந்தியா அணை கட்டினா, கட்டி முடிக்கிற வரை காத்திருப்போம். பிறகு 10 ஏவுகணைகளை வீசி அந்த அணையை தகர்ப்போம். பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு. எங்களுக்கு அச்சுறுத்தல் வந்தா, உலகத்தோட பாதியை அழிச்சுடுவோம்”னு அவர் பேசியிருக்கார்.

இதையும் படிங்க: காசாவில் இனப்படுகொலை!! இந்தியா வேடிக்கை பார்ப்பதாக பிரியங்கா ஆவேசம்!! இஸ்ரேல் தூதர் பதில்!

இது மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குஜராத் ஜாம்நகரில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை குறிவைத்து மிரட்டல் விடுத்திருக்கார். குரானில் வரும் சூரா பில் கதையை சொல்லி, அம்பானியோட படத்தை காட்டி, “இந்தியாவை சும்மா விடமாட்டோம். விலைமதிப்பற்ற வளங்களை தாக்குவோம்”னு மறைமுகமாக அந்த ஆலையை கடல் வழியோ, வான்வழியோ தாக்க முடியும்னு மிரட்டியிருக்கார். இது இந்திய பொருளாதாரத்துக்கு எதிரான முதல் நேரடி மிரட்டல்.

பாகிஸ்தானில் ஆட்சியாளர்களை விட ராணுவத்துக்கு தான் அதிகாரம் அதிகம். அதனாலேயே டிரம்ப் நிர்வாகம், அசிம் முனிரை அடிக்கடி அழைச்சு விருந்து கொடுத்து கவுரவிக்குது. ஜூன் மாதம் முனிர் அமெரிக்கா சென்றபோது, டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளிச்சு, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை தருவதாகவும், எண்ணெய் ஒப்பந்தங்களை ஆராய்வதாகவும் உறுதியளிச்சார். இந்த முறையும் முனிர் அமெரிக்க ராணுவ, அரசியல் தலைவர்களை சந்திச்சு பேசியிருக்கார்.

இந்த மிரட்டல்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையாக பதிலடி கொடுத்திருக்கு. “பாகிஸ்தானோட இந்த அணு ஆயுத மிரட்டல் அதோட பொறுப்பற்ற தன்மையை காட்டுது. இது அவங்களோட வழக்கமான உத்தி. இந்தியா இதுக்கு அடிபணியாது. நம்ம தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்”னு அறிக்கை வெளியிட்டிருக்கு.

இந்த சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் உறவில் பதற்றத்தை மேலும் அதிகரிச்சிருக்கு. அமெரிக்காவோட ஆதரவு பாகிஸ்தானுக்கு தைரியத்தை கொடுத்தாலும், இந்தியாவோட பொருளாதார, ராணுவ பலம் இதுபோன்ற மிரட்டல்களை எதிர்கொள்ளும் வல்லமை உடையது. மோடி-புதின் சந்திப்பு, இந்தியாவோட மூலோபாய நிலைப்பாட்டை வலுப்படுத்தி, பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்க உதவலாம்.

இதையும் படிங்க: சீனாவை பார்த்து பயப்படும் அமெரிக்கா!! இந்தியா, பிரேசிலிடம் எகிறும் ட்ரம்ப் அடக்கி வாசிப்பது ஏன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share