மேற்கு வங்கத்தில் உச்சகட்ட அரசியல் நெருக்கடி! சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!
தேர்தல் தோல்விக்கு பின்னரும் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுப்பு தெரிவித்ததால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174-ன் கீழ் ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநில அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அசாதாரண சூழல், இன்று அம்மாநிலச் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த பிறகும், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததால், ஆளுநர் ஆர்.என். ரவி (R.N. Ravi) இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் கடந்த மே 4-ஆம் தேதி வெளியானதில், பாஜக 207 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களை மட்டுமே பெற்று 15 ஆண்டுகால ஆட்சியை இழந்தது. தேர்தல் முடிவுகள் சதித் திட்டம் மூலம் மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, மக்கள் தீர்ப்பை நான் ஏற்கவில்லை, எனவே ராஜினாமா செய்ய மாட்டேன் என அறிவித்தார். மேலும், ஆளுநர் மாளிகைக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிக்கவும் அவர் மறுத்துவிட்டார்.
17-வது மேற்கு வங்கச் சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் (மே 07) முடிவடையும் நிலையில், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 174 (2)(b)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுநர் சட்டப்பேரவையைக் கலைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்: பாஜக கூட்டணி அதிரடி முன்னிலை..!! மம்தா பானர்ஜி பின்னடைவு..!!
சட்டப்பேரவை கலைக்கப்பட்டதன் மூலம், மம்தா பானர்ஜி தானாகவே முதலமைச்சர் பதவியை இழக்கிறார். 207 இடங்களை வென்றுள்ள பாஜக, வரும் மே 09-ஆம் தேதி (சனிக்கிழமை) ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டுப் புதிய அரசை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் பால்டா (Falta) தொகுதியில் மட்டும் முறைகேடு புகார்கள் காரணமாக வரும் மே 21-ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
திரையுலகிலிருந்து விலகித் தமிழகத்தில் புதிய அரசியல் பாதையைத் தொடங்கியுள்ள விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தயாராகி வரும் இதே வேளையில், தேசிய அளவில் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு நெருக்கடி இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இதுவரை இப்படியொரு அதிரடி சம்பவம் நடந்ததில்லை! மம்தா கோட்டையைத் தகர்க்கிறதா பாஜக? மேற்கு வங்க எக்ஸிட் போல்!