இனி Tax டென்ஷன் இல்லை! மத்திய அரசின் புதிய ரூல்ஸ்! உங்களுக்கு என்ன லாபம்?
60 வருடமாக குழப்பமாக இருந்த சட்டத்தை மாற்றி, புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்காங்க. சரி இது மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என பார்க்கலாம்.
நீங்க மாசம் மாசம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்துக்கு வரி கட்டுறீங்களா?. உங்க வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர போற ஒரு முக்கியமான சட்டத்தை பத்திதான் தெரிஞ்சிக்கோங்க. 60 வருடமாக குழப்பமாக இருந்த சட்டத்தை மாற்றி, புதிய வருமான வரி மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்காங்க. சரி இது மக்களுக்கு எந்த வகையில் நன்மை பயக்கும் என பார்க்கலாம்.
1961 இயற்றப்பட்ட வருமான வரி சட்டம் ரொம்பவும் சிக்கலானதாகவும், சாதாரண மக்களுக்கு புரியாத மொழியில இருக்கு. இத மாத்திரம்னு சொல்லி அரசாங்கம் முதல்ல ஒரு மசோதாவை கொண்டு வந்தாங்க. ஆனா அதில் சில குழப்பங்கள் இருந்ததால், அரசாங்கமே திரும்ப நிபுணர்கள் குழுவோட 285 பரிந்துரைகளை ஏத்துக்கிட்டு இப்போ ஒரு தெளிவான எளிமையான புதிய மசோதாவை கொண்டு வந்திருக்காங்க. இனிமே வர மாற்றங்கள் எல்லாமே ஏப்ரல் 1 202-யில் இருந்து அமலுக்கு வரும்.
இதில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், லேட்டா பைல் பண்ணாலும் ரீபண்ட் உண்டு. யோசிச்சு பாருங்க ஏதோ ஒரு காரணத்தினால நீங்க கடைசி தேதிக்கு பிறகு ஐடிஆர் பைல் பண்றீங்க பழைய சட்டப்படி உங்களுக்கு ரீபண்ட் கிடைச்சிருந்தா கூட அது வராது. ஆனா இந்த புதிய சட்டப்படி லேட்டா ஃபைல் பண்ணாலும் உங்க ரீபண்ட் பணம் உங்க கைக்கு வந்தே தீரும். இது லட்சக்கணக்கான சம்பளதாரர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதி. இரண்டாவது நன்மை என்னன்னா தெரியாம செஞ்ச தப்புக்கு அபராதம் கிடையாது.
இதையும் படிங்க: “கூட்டணியே போனாலும் பரவாயில்லை...” - தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் திமுகவை அடித்து துவைத்த வேல்முருகன்...!
நம்மில் பல பேர் வருமான வரி விஷயத்துல தெரியாம சின்ன சின்ன தவறுகள் செய்ய வாய்ப்பு இருக்கு. இனிமே அப்படி நீங்க வேணும்னே செய்யாத தற்செயலா நடந்த தவறுகளுக்கு அபராதம் விதிக்கிறத தள்ளுபடி செய்ய இந்த புதிய சட்டம் அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்குது. இது ஒரு வரவேற்கத்தக்க ஒரு மாற்றம். மூன்றாவது நன்மை என்னன்னா வாடகை வருமானம் வருபவர்களுக்கானது. உங்களுக்கு வீடு கடை மூலமா வாடகை வருமானம் வருதா? இனிமே அந்த வருமானத்தில் இருந்து நிலையா 30% கழிச்சிட்டு மீதி தொகைக்கு வரிக்கட்டுனா போதும்.
அது மட்டுமல்லாம அந்த வீட்டை வாங்கவோ, கட்டவோ, ரிப்பேர் செய்யவோ நீங்க வாங்குன கடனுக்கு கட்டுற வட்டியையும் கழிச்சுக்கலாம். நான்காவது நன்மை என்னன்னா இனிமே சட்டத்தை படிக்கிறது ரொம்ப ஈஸி. இதுவரைக்கும் பினான்சியல் இயர், அசஸ்மென்ட் இயர்னு ரெண்டு வார்த்தை நம்மள குழப்பிக்கிட்டே இருந்துச்சு. இனிமே அது கிடையாது. ஒரே வார்த்தைதான் டாக்ஸ் இயர் அதாவது எந்த வருஷம் சம்பாதிக்கிறோமோ அதே வருஷம் வரைக்கட்டோம். கணக்கு ரொம்ப சிம்பிள். சட்டத்தோட மொழியே ரொம்ப எளிமையாக்கப்பட்டிருக்கு. சரி இதெல்லாம் பொதுவான மக்களுக்கு.
தொழில் பண்றவங்களுக்கு முதலீடு செய்றவங்களுக்கு என்ன நன்மை? ஒரு கம்பெனி இன்னொரு கம்பெனியில் இருந்து வர ரிட்டன்களுக்கு வரி கட்டுனா அதுக்கு வரி விலக்கு கிடைக்கும். இதனால இரட்டை வரி விதிப்பு தவிர்க்கப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் எதுன்னு ரொம்ப தெளிவா வரையறுத்து இருக்காங்க. புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யறவங்களுக்கு பழைய என்பிஎஆ-யில் இருந்த எல்லா வரிச்சலுகைகளும் கிடைக்கும். சவுதி அரேபியா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்றதுக்கு வரிசலுகைகள் கொடுத்திருக்காங்க. இதனால நாட்டுக்கு முதலீடுகள் அதிகமாகும்.
இதையும் படிங்க: திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!