×
 

அரசு பங்களாவை காலி செய்ய அடம்பிடிக்கும் சந்திரசூட்! லிஸ்ட் போடும் காரணங்கள்..!

நான் ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு பங்களாவை வாடகைக்கு அரசு ஒதுக்கியது.  ஆனால் அந்த பங்களா கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் இப்போது புனரமைப்பு பணி நடக்கிறது. 

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், 2000 ஆம் ஆண்டு மும்பை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியான அவர், 2016 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சந்திரசூட், 2024ஆம் ஆண்டு நவம்பரில் பணி ஓய்வு பெற்றார். 

அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட், அயோத்தி விவகாரம், தனியுரிமை, காஷ்மீர் சிறப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி பங்களாவில் இருந்து சந்திரசூட்டை காலி செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பரபரப்பு கடிதம் பறந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 1ம் தேதி சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் சார்பில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர விவகாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கல்வி நிதி விவகாரம்.. தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு.. சுப்ரீம் கோர்ட் உத்தரவால் திமுக அப்செட்..!

அதில், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பயன்படுத்தி வருகிறார். பங்களாவை பயன்படுத்தும் கால அவகாசம் மே 31 ஆம் தேதி உடன் முடிந்து விட்டது. அவரை உடனடியாக வெளியேற வைத்து பங்களாவை ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறுகையில்,  நான் ஓய்வு பெற்ற பிறகு எனக்கு வேறு பங்களாவை வாடகைக்கு அரசு ஒதுக்கியது.  ஆனால் அந்த பங்களா கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாததால் இப்போது புனரமைப்பு பணி நடக்கிறது. 

அந்த பணி முடிந்த மறுநாள் அங்கு சென்று விடுவேன் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளேன். என் மகள்கள் பிறந்தது முதலே உடல்நல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். மரபணுசார்ந்த குறைபாடு உள்ளது.  

நெமலின் மயோபதி பிரச்சனை இருப்பதால் எய்ம்ஸ் நிபுணர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது என் தனிப்பட்ட பிரச்சனை தான். ஆனால் ஒரு வீட்டை உடனடியாக மாற்றாமல் இருக்க இவ்வளவு நேரம் பிடிப்பது ஏன் என்பதை நான் தெளிவுப்படுத்த வேண்டும். 
 
நீதித்துறையில் உயரிய பொறுப்பில் இருந்தவன். இதனால் எனது பொறுப்பு என்னவென்று எனக்கு தெரியும். விரைவில் இதை காலி செய்து விடுவேன் என விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: கும்பாபிஷேகம் முடிஞ்சாச்சு.. இனி செந்தில்நாதனை தரிசிக்கலாம்.. போலாம் ரைட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share