×
 

மேகங்களுக்கு நடுவே கிரிக்கெட்! லடாக்கில் 11,800 அடி உயரத்தில் உருவாகும் உலகின் மிக உயரமான ஸ்டேடியம்!

கடல் மட்டத்திலிருந்து 11,800 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான கிரிக்கெட் ஸ்டேடியத்தைக் கட்ட ரூ.100 கோடியில் லடாக் நிர்வாகம் திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.

இந்திய விளையாட்டு உள்கட்டமைப்பில் புதிய உலக சாதனையாக, மத்திய யூனியன் பிரதேசமான லடாக்கில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,800 அடி (சுமார் 3,600 மீட்டர்) உயரத்தில், உலகின் மிக உயரமான சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்ட லடாக் நிர்வாகம் பிரம்மாண்ட திட்டத்தை வகுத்துள்ளது.  

சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் லடாக்கின் தலைநகரான லே-வுக்கு அருகே உள்ள திக்சே மற்றும் ரன்பீர்பூர் பகுதியில் அமையவுள்ள இம்மைதானத்திற்கான முதற்கட்ட விரிவான திட்ட அறிக்கையை (Detailed Project Report - DPR) தயாரிக்கும் பணிகளை லடாக் நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. 

தற்போது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானமே அதிக உயரத்தில் அமைந்துள்ள சர்வதேச மைதானமாகத் திகழ்ந்து வரும் நிலையில், அதைவிட இருமடங்கு கூடுதல் உயரத்தில் லடாக்கில் இந்த மைதானம் அமையவுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படிங்க: நான் ஜென்Z தலைமுறை! லடாக்கில் ராணுவ வீரர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்! தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினார்!

லடாக்கின் கடுமையான குளிர் மற்றும் அதீத உயர சூழலுக்கு ஏற்ற வகையில் சர்வதேசத் தரத்துடனும், நவீனப் பாதுகாப்பு வசதிகளுடனும் இந்த மைதானம் வடிவமைக்கப்பட உள்ளது. உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகளை வழங்குவதுடன், இமயமலைப் பகுதியில் விளையாட்டுச் சுற்றுலாவை (Sports Tourism) புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லவும், உயர்மட்டப் பயிற்சி முகாம்களை நடத்தவும் இந்த மைதானம் பெருமளவில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதையும் படிங்க: "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share