×
 

7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்! மோடியுடன் இன்று முக்கிய சந்திப்பு!!

இந்த ஆண்டு 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

புதுடெல்லி: 18-வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் புதுடெல்லி வந்தடைந்தார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால், அவரது வருகை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். இதையொட்டி புதுடெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே ரஷ்ய அதிபர், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசி, அபுதாபி இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.



இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் தற்போது புதுடெல்லி வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட பதற்றத்துக்குப் பிறகு இந்தியா–சீனா உறவில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. சமீப காலமாக இரு நாடுகளும் உறவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஷி ஜின்பிங்கின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் இன்று மாலை 5.45 மணியளவில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தலைவர்களின் சந்திப்பில் இருதரப்பு உறவுகள், எல்லை விவகாரம் மற்றும் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியா வந்திருப்பதால், மோடி–ஷி ஜின்பிங் சந்திப்பு சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி, புதின், ஜி ஜின்பிங்! இந்தியாவில் ஒன்று கூடும் உலக தலைவர்கள்! பிரதமர் ட்வீட் வைரல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share