ஒன்னுமே புரியலையே! அரியர் தேர்வில் மாற்று வினாத்தாள்... குழம்பிய மாணவர்கள்...!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அரியர் தேர்வில் மாற்று வினாத்தாள் வழங்கியதால் மாணவர்கள் குழம்பினர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கல்வி நிறுவனமாகும். இது 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, தமிழ்நாடு அரசால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவப்பட்டது.
திருநெல்வேலி மாநகரில் உள்ள கொக்கிரகுளம் பகுதியில் மாவட்ட ஆட்சியக வளாகத்தில் முதலில் தொடங்கப்பட்ட இது, பின்னர் அபிஷேகபட்டியில் 520 ஏக்கர் பரப்பளவில் முக்கிய வளாகத்தைக் கொண்டு விரிவடைந்தது. மேலும், ஆழ்வார்குறிச்சியில் 120 ஏக்கர், பரமகல்யாணி கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறைக்கு 0.49 கி.மீ., மற்றும் ராஜக்கமங்கலத்தில் கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு 70 ஏக்கர் பரப்பளவு உள்ளது.
இப்பல்கலைக்கழகம் கலை, மொழி, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 24 துறைகளைக் கொண்டுள்ளது. இதில் ஆங்கிலம், தமிழ், சமூகவியல், தொல்லியல், நூலகவியல், மேலாண்மை, வணிகவியல், பொருளியல், இதழியல், குற்றவியல், உளவியல், வரலாறு போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் அடங்கும். இவை இளநிலை, முதுநிலை, எம்.பில், மற்றும் பிஎச்.டி படிப்புகளை (முழுநேர மற்றும் பகுதிநேர) வழங்குகின்றன. மேலும், தொழில் முனைவோருக்கான ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்புகள், திறன் வளர்ச்சி டிப்ளமோக்கள் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 109 இணைப்பு கல்லூரிகள், 9 மனோ கல்லூரிகள், மற்றும் ஒரு சட்டக் கல்லூரி உள்ளன.
இதையும் படிங்க: SIR விவகாரத்தில் இரட்டை வேடம்.... திமுக முகமூடியை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ...!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான அரியர் தேர்வு நடந்தது. மேனேஜ்மென்ட் அக்கவுண்டிங் அரியர் தீர்வு நடைபெற்றது. அப்போது மாணவர்களுக்கு மாற்று வினாத்தாள் வழங்கியதால் குழப்பம் அடைந்தனர். மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் தேர்வுக்கு பதிலாக ரீடைல் மேனேஜ்மென்ட் பாடத்திற்கான வினாத்தாள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். பின்னர் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் உரிய வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கி தேர்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: பணப் பறிப்பே பாஜகவின் கொள்கை... மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்...!