ராகுல்காந்திக்கு No!! சசி தரூருக்கு Yes!! அரசியல் விளையாட்டை அரங்கேற்றும் பாஜக! கடுகடுப்பில் காங்.,!
ரஷ்ய அதிபருக்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட இரவு விருந்தில் காங்., எம்பி சசி தரூர் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்த சிறப்பு இரவு விருந்தில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் பங்கேற்றது, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் புயலை கிளப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கு அழைப்பு இல்லை என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்த நிலையில், பார்லிமென்ட் வெளியுறவுக் குழு தலைவர் என்ற முறையில் சசி தரூருக்கு மட்டும் அழைப்பு வந்தது. அதை ஏற்று பங்கேற்ற சசி தரூர், மோடி-புடின் நட்பை பாராட்டி பேசியதும் காங்கிரஸ் தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினின் இரு நாள் இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் மோடி விமான நிலையத்தில் நேரில் வரவேற்று, தனது இல்லத்தில் விருந்து அளித்தார். ஜனாதிபதி முர்மு வழங்கிய இரவு விருந்தில் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என்று ராகுல் காந்தியும் கார்கேயும் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: அமெரிக்கா வாங்கலாம்!! இந்தியா வாங்க கூடதா?! ட்ரம்புக்கு நெத்தியடி கேள்வி!! புடின் மாஸ் அண்ணாச்சி!
ஆனால், பார்லிமென்ட் வெளியுறவுக் குழு தலைவர் என்ற முறையில் சசி தரூருக்கு மட்டும் அழைப்பு வந்தது. அதை ஏற்று அவர் விருந்தில் கலந்து கொண்டார். பிறகு, மோடி-புடின் நட்புறவைப் பாராட்டி பேசியது காங்கிரஸ் தொண்டர்களை கோபப்படுத்தியது.
சசி தரூர் கூறியது: “வெளியுறவுக் கொள்கையில் புராதான சின்னங்களும் செயல்திறனும் முக்கியம். விமான நிலையத்துக்கு நேரில் சென்று புடினை வரவேற்ற மோடி, ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கீதையை பரிசளித்தது புராதான சின்னங்களைப் பெருமைப்படுத்தும் செயல். ரஷ்யாவுடனான நீண்ட நட்பின் தொடர்ச்சி” என்று பாராட்டினார்.
ஆனால், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா கடுமையாக விமர்சித்தார். “எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு இல்லாத போது, சசி தரூருக்கு மட்டும் ஏன் அழைப்பு? இதில் அரசியல் விளையாட்டு இருக்கிறதா? அதை ஏற்காமல் மறுக்க வேண்டியதுதானே?” என்று கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் “கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக சசி தரூர் செயல்படுகிறார்” என்று கோபத்தை வெளிப்படுத்தினர்.
பாஜக எம்பி மனோஜ் திவாரி ஆதரவாக பேசினார். “வெளியுறவுக் கொள்கை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. காங்கிரஸ் ஏன் இதை அரசியலாக்குகிறது?” என்று கேட்டார். ஆனால், காங்கிரஸ் உட்கட்சி வட்டாரத்தில், “சசி தரூர் தனி ஆள் அரசியல் செய்கிறார்” என்று பேச்சு அடிபடுகிறது.
ரஷ்ய அதிபர் புடின் பயணத்தில் மோடி-புடின் நட்பு, பாதுகாப்பு ஒப்பந்தங்கள், எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்டவை பேசப்பட்ட நிலையில், சசி தரூரின் பங்கேற்பு காங்கிரஸ் உள்ளே பிளவை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்கவில்லை என்றாலும், கட்சியின் உட்கட்சி பூகம்பம் தொடங்கியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: வலுவடையும் இந்தியா - ரஷ்யா உறவு! அதிபர் புடினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு!!