அதிரும் அரசியல் களம்...!! “மு.க.ஸ்டாலின் தான் முக்கியமான தலைவர்...” - ஒரே போடாய் போட்ட மாணிக்கம் தாகூர்...!
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இந்தியா கூட்டணியில் மு.க.ஸ்டாலினை தலைவராக அறிவிக்க வேண்டும் என மணிசங்கர் ஐயா தெரிவித்திருப்பது பற்றிய கேள்விக்கு, மணிசங்கர் ஐயர் காங்கிரஸிலேயே இல்லை. அவருக்கு வயதாகிவிட்டது. அதனால் அவரை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். காங்கிரஸில் மக்களவை மற்றும் மாநிலங்களவை சீட் கேட்டார், கொடுக்கவில்லை. அதனால் அப்படி பேசிவருகிறார்.
மணிசங்கர் ஐயர் சொன்ன கருத்தை வைத்து, இந்தியா கூட்டணியிலேயே ஸ்டாலின் தான் வலுவான தலைவர், அவர்மட்டும் இல்லை என்றால் கூட்டணியில் இந்தியா என்ற பெயர் மட்டும் தான் இருக்கும் என சொல்லியிருக்கிறார் என்ற கேள்விக்கு, இந்தியா கூட்டணியில் இருப்பவர்களை விட்டுவிட்டு கூட்டணிக்குள் இல்லாதவர்களைப் பற்றி பேசுகிறீர்கள். இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். எதிர்க்கட்சித் தலைவர்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றவர் என்பதும் குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு வெளியிலுள்ளவர்கள் அதன் உள்நடப்புகள் குறித்து கருத்து கூறுவது தேவையற்றது .
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தியா கூட்டணியில் இல்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து கூட்டணியை விமர்சித்து வருவது ஏன் எனத் தெரியவில்லை. சீமான் தனது கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். சமீப காலங்களில் நாம் தமிழர் கட்சியின் ஆதரவு குறைந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவுகின்றன. கடந்த தேர்தலில் அவர் பெற்ற வாக்கு சதவீதம் சுமார் 8% மட்டுமே என்பதும் குறிப்பிடப்படுகிறது. அடுத்த தேர்தலில் அவர் எவ்வளவு சதவீதம் வாங்குகிறார் என பார்ப்போம் என்றார்.
இதையும் படிங்க: “அப்போ இல்லாத ரோசம்... இப்போ ஏன் வருது...?” - மாணிக்கம் தாகூருக்கு எதிராக போஸ்டர்கள்.... இரண்டு துண்டாகும் காங்கிரஸ்...!
அதிமுக - பாஜக கூட்டணி 18யில் இருந்து 20 சதவீத வாக்குகளுக்கு மேல தாண்ட மாட்டாங்க. தோல்வி பயத்தால் நயினார் நாகேந்திரனே வேறு தொகுதியில் போட்டியிடலாமா என யோசித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி தமிழ்நாட்டில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என்பதை எழுதிக் கொடுக்க முடியும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே... விடிந்ததும் மாணிக்கம் தாகூர் கொடுத்த அதிர்ச்சி... ஆடிப்போன காங்கிரஸ் தலைமை... !!