#BREAKING: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்…
நாட்டின் 15 ஆவது குடியரசு துணைத் தலைவர் ஆனார் சி.பி ராதாகிருஷ்ணன்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்தது.
சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது. பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, என் டி ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வந்தனர்.
செப்டம்பர் 9 ஆம் தேதி துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை தோற்கடித்து சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன், பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி மூலமும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: டெல்லியில் முகாமிட்ட பாஜக தலைகள்! அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங்... என்னவாம்?
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி! பாஜகவினரை ஆஹா…ஓஹோ… என புகழ்ந்த செங்கோட்டையன்