×
 

நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!

திமுக மற்றும் இந்திய முஸ்லிம் லீக் கட்சி நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய முஸ்லிம் லீக் கட்சியை கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது. இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் நாளை ஆலோசிக்க உள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய முஸ்லிம் லீக் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

2011, 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களிலும், 2009, 2014, 2019, 2024 லோக்சபா தேர்தல்களிலும் இணைந்து போட்டியிட்டுள்ளனர். பொதுவாக லீக்-க்கு சட்டமன்றத் தேர்தல்களில் 2 முதல் 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவது வழக்கம். 2021இல் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. லோக்சபாவில் ராமநாதபுரம் போன்ற தொகுதி அடிக்கடி லீக்-க்கு கிடைப்பது வழக்கமாகிவிட்டது.

இத்தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் இருப்பதால், லீக்-க்கு வலுவான அடித்தளம் உள்ளது.தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக லீக் திமுகவிடம் 5 தொகுதிகளைக் கோரியுள்ளது. மேலும், கூட்டணியில் மொத்தம் 16 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் இதைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: எந்தெந்த தொகுதிகள்? திமுகவிடம் தேமுதிக உத்தேச பட்டியல் கொடுத்ததாக தகவல்..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய முஸ்லிம் லீக் கட்சி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு அமைத்தது. இந்த நிலையில் இந்திய முஸ்லிம் லீக் கட்சியை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்கு அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் பேசி சமூகம் முடிவு எடுப்பார்கள். 

இதையும் படிங்க: “திமுக + தேமுதிக கொள்ளையடிப்பதற்கான கூட்டணி”... ஓபிஎஸையும் விளாசி தள்ளிய கே.டி.ராஜேந்திர பாலாஜி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share