'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' - டிச.8-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.8ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்.
வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களைத் துரிதப்படுத்தவும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்தவும், தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது. கூட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுவது, 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற முக்கியமான தேர்தல் செயல்பாடு குறித்து விரிவான ஆலோசனை நடத்துவதுதான். இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கட்சிக்குச் சாதகமான வாக்குகளை உறுதி செய்வதற்கான உத்திகள், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல், மற்றும் வாக்காளர்களைச் சந்திக்கும் வழிமுறைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.
வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்குத் தேவையான பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் எந்த அளவிற்கு நிறைவடைந்துள்ளன என்பது குறித்தும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவது, புதிய வாக்காளர்களைக் கவர்வது, மற்றும் அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற தேர்தல் வெற்றிக்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவதற்கு இந்தக் கூட்டம் ஒரு முக்கிய அடித்தளமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: "டெல்டாவில் திமுக வென்றதால் சதி" - நெல் கொள்முதலில் பாஜக, அதிமுக மீது அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு!