கவன ஈர்ப்பை கிடப்பில் போடுவதா? தமிழர்களின் பாதுகாப்பு எங்கே? எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!!
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவையில் முக்கிய பொதுப் பிரச்சினைகள் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த வெளிநடப்பு நடைபெற்றது. சபாநாயகர் அந்தத் தீர்மானங்களை அனுமதிக்காததால் அதிருப்தி அடைந்த அதிமுக எம்எல்ஏக்கள் முழக்கங்களுடன் அவையை விட்டு வெளியேறினர்.
குறிப்பாக கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அவர்கள் உரத்த குரலில் கோஷமிட்டனர். கால்நடைகளைத் தேடிச் சென்றபோது நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு தமிழர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அதிமுக தரப்பு குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் ஏற்கனவே பேரவையில் விவாதிக்கப்பட்டிருந்தாலும், போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு முழங்கினர்.
தமிழர்களின் உயிர் எளிதாகப் பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். தமிழர்களை காப்போம் என்று சொல்லும் தமிழக வெற்றிக்கழக அரசு சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்... அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!
சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்து ஐந்து நாட்களான பின்னும் விவாதத்திற்கு ஏற்க மறுப்பதாக தெரிவித்தார். சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டு வருவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்ததாக கூறினார். ஈரானிய கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர் தொடர்பான கவன ஈர்ப்பை விவாதத்திற்கு ஏற்க மறுக்கிறார்கள் என்று கூறினார். மூன்று மீனவர்களுடன் ஒரு வாரமாக தமிழகம் கொண்டு வர முடியாமல் தவித்து வருவதாகவும் இதைவிட என்ன முக்கியமானது இருக்கிறது என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: FIR- ல் என் பெயரை இல்ல..! எத்தனை CASE போட்டாலும் போராடத் தயார்..! செந்தில் பாலாஜி திட்டவட்டம்..!!