×
 

ஓடுதளத்தில் பிரச்சனை.. வானில் வட்டம் அடித்த விமானம்.. பரபரப்பான சென்னை ஏர்போர்ட்!

 சென்னை விமான நிலைய  ஓடுதள பாதையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மும்பையில் இருந்து சென்னை வந்தடைந்த விமானம் தரையிறங்க முடியாமல் வானில் சுமார் அரை மணி நேரமாக வட்டம் அடைத்தது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவது வழக்கம். இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று வழக்கம் போல் 164 பயணிகளுடன் புறப்பட்டு காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. 

அப்போது சென்னை விமான நிலைய முதல் ரன்வேயில் தரையிறங்க முற்பட்டபோது, விமானம் ஓடுபாதையில் பிரச்னை ஏற்பட்டதால் உடனடியாக மீண்டும் மேல் நோக்கி பறந்தது. அதைத்தொடர்ந்து சுமார் 10 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் விமானம், முதல் ரன்வேயில் தரையிறங்க முற்பட்டபோது ஓடு பாதையில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதால் விமானம் இரண்டாவது முறையும் தரையிறங்காமல் வானில் பறந்தது.

இதையும் படிங்க: 400 ஏக்கரை ஆட்டையப்போட்ட இஸ்லாமியர்கள்... கத்தோலிக்க பிஷப்கள் வக்ஃபு திருத்த மசோதாவுக்கு ஆதரவு..!

இதையடுத்து மூன்றாவது முறை முயற்சியில் காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. ஓடு பாதையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்து பறந்து, பின்பு மூன்றாவது முறையாக பத்திரமாக தரையிறங்கியது. 

இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த விமானம் சென்னையில் இருந்து பகல் 12.23 மணிக்கு பயணிகளுடன் மீண்டும் மதுரை புறப்பட்டு சென்றது.

இதையும் படிங்க: அக்காவை இரும்பு ராடால் தாக்கிய தம்பி.. 13 வயது சிறுவன் பரிதாப பலி.. உயிருக்கு போராடும் அக்கா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share