தரமற்ற உணவுக்கு CHECK..! விடுதி காப்பாளர்களுக்கு சமூகநீதி துறை அதிரடி உத்தரவு..!
தரமற்ற உணவு விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமூக நீதி துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், துறை சார்பில் ஒரு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதி காப்பாளர்கள் காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை புகைப்படம் எடுத்து, துறை அதிகாரிகள் உருவாக்கிய வாட்ஸ் அப் குழுக்களில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சமூக நீதித்துறை விடுதிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் முக்கிய அமைப்புகளாக செயல்படுகின்றன. இங்கு தங்கி படிக்கும் மாணவர்களின் உடல் நலனுக்கு உணவின் தரம் மிகவும் முக்கியமானது.
எனினும், சில விடுதிகளில் உணவு தரமற்ற முறையில் வழங்கப்படுவதாக, அளவு குறைவாக இருப்பதாகவும், சில சமயங்களில் புழு, பூச்சி போன்றவை கலந்திருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்களை தீவிரமாக எடுத்துக்கொண்ட துறை, உணவு விநியோகத்தை கண்காணிக்க புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உத்தரவின்படி, ஒவ்வொரு விடுதியிலும் காப்பாளர்கள் அல்லது பொறுப்பாளர்கள் தினசரி மூன்று வேளை உணவுகளையும் தயாரிக்கப்பட்ட உடனே புகைப்படம் எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!
இந்த புகைப்படங்கள் துறை சார்ந்த வாட்ஸ் அப் குழுக்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதிகாரிகள் இந்த புகைப்படங்களை ஆய்வு செய்து, உணவின் அளவு, தரம், சுகாதாரம் ஆகியவற்றை கண்காணிக்க முடியும். எந்த ஒரு விடுதியிலும் உணவு தரம் குறைவாக இருந்தால் அல்லது புகைப்படம் அனுப்பத் தவறினால், சம்பந்தப்பட்ட காப்பாளர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு 'நோ என்ட்ரி'! மோசடி கும்பலுக்கு அதிரடி செக்..! சேலம் அரச மருத்துவமனை முக்கிய முடிவு..!!