×
 

"இந்திய விவசாயிகளை அமெரிக்காவிடம் அடகு வைக்காதீர்!" கனிமொழி எம்பி தூத்துக்குடியில் ஆவேசம்!

மத்திய பட்ஜெட், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அரசை கடுமையாக கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மத்திய பட்ஜெட், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவுடனான சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேசிய கனிமொழி, இது இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் என்று சாடினார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 0 சதவீதம் வரி, ஆனால் இந்தியாவில் இருந்து அங்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 18 சதவீதம் வரி என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது எப்படி ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்க முடியும்? இந்தத் தகவலை இந்தியப் பிரதமர் அறிவிக்காமல், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தப் பின்புதான் இப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது நமக்குத் தெரிகிறது.

அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் இந்தியாவிற்குள் தாராளமாக வரத் தொடங்கினால், நம் நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தியாவை ஒரு ‘டம்பிங் கிரவுண்ட்’ போல மாற்றிவிடுவார்கள். இதனை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தத்தின் மூலம் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: 'புராஜெக்ட் வால்ட்': பாக்.,-ல் 13 பில்லியன் டாலர் முதலீடு..!! அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா..!!

இவ்வளவு பெரிய ஒப்பந்தங்கள் போடப்படும்போது, நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் அமைச்சர்கள் இது குறித்து விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும். அதுதான் மரபு. பிரதமர் குடியரசுத் தலைவரின் உரைக்கு பதில் சொல்லும்போதாவது இதைப்பற்றித் தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் எதையுமே சொல்லவில்லை.

நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்துப் பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். "நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச வாய்ப்பு இல்லை, வேறு யாருக்கும் பேசக்கூடிய வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. எதிர்க்கட்சித் தலைவரே இல்லை என்பது போன்றும், பிரதமரே நாடாளுமன்றத்தில் பேசுவதற்குப் பயப்படக்கூடிய சூழ்நிலையுமே நிலவுகிறது என்று அவர்களே சொல்லும் நிலை இருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் உட்கட்சி மாநாடுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அவர் கூறியதாவது, ஏற்கனவே கோவை மற்றும் தஞ்சை மண்டலங்களில் மகளிர் அணி மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மற்றும் திருவண்ணாமலையில் இளைஞரணி மாநாடுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. இதற்குப் பிறகு இளைஞர் அணி அல்லது மகளிர் அணி மாநாடுகள் இருக்காது. அடுத்தகட்டமாகத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து திமுக-வின் பிரம்மாண்டமான மாநில மாநாடு நடைபெறும் எனத் தெரிவித்தார்.


 

இதையும் படிங்க: அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share