×
 

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்... என்ன செய்யலாம்? முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஆலோசனை...!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் நாளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். மலாக்கா ஜலசந்தி அருகே இன்று மதியத்திற்குள் சென்யார் புயல் உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குறிப்பாக மலாக்கா ஜலசந்தியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று இரவு 11:30 மணி அளவில் தீவிரம் அடைந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் அதே பகுதியில் நிலவி வந்தது.

இந்த சென்யார் புயல் தமிழகத்திலிருந்து கிட்டத்தட்ட 2600 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த நிலையில், தமிழகத்திற்கு நேரடியாக மழையோ அல்லது காற்றோ பாதிப்பு கிடையாது என்பதையும் ஆய்வு மையம் தெளிவுப்படுத்தியது.

அதேபோல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவிய வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதற்கடுத்த 24 மணி நேரத்தில இந்த புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், மலாக்கா ஜலசந்தி, தெற்கு அந்த மானை ஒட்டிய கடல் பகுதியில் சென்யார் புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்யார் புயல் இன்று காலை 5:30 மணி அளவில் உருவாகி இருப்பதாக தெரிவித்தது. 

இதையும் படிங்க: #BREAKING: சென்யார் புயல் உருவானது... இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

இதனிடையே, தமிழகத்தில் நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகன மழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்ச ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING வங்கக்கடலில் இன்று உருவாகிறது ‘சென்யார்’ புயல்.... எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share