×
 

"போலீஸ் மேல கோபம்"..! நெல்லையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..! 3 சிறார்கள் சரண்..!

நெல்லையில் ராமாயன்பட்டி புறக்காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய மூன்று சிறார்கள் சரணடைந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமையன்பட்டி புற காவல் நிலையத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாகன சோதனையின் போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட ஆத்திரத்தில், மூன்று 17 வயது சிறுவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த சூழலில், குற்றவாளிகள் தாமாகவே காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவு, ராமையன்பட்டி பகுதியில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தினர்.

அந்த வாகனத்தில் இருந்த இளைஞர்கள் போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பின்னர் பெட்ரோல் குண்டுகளைத் தயாரித்து காவல் நிலையத்தின் மீது வீசியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, குண்டு நிலையத்தின் உள்ளே விழாமல் வெளியே விழுந்து வெடித்ததால் பெரிய சேதம் ஏற்படவில்லை. ஆனால், இந்த துணிச்சல் செயல் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: நெல்லை மக்களுக்காக பாடுபடுவேன்..! என்னை நம்புங்க..! MLA ஆர்.எஸ். முருகன் உறுதி..!

போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மூவரும் 17 வயது சிறுவர்கள் என்பது கண்டறியப்பட்டது. போலீசாரின் தேடுதல் தீவிரமடைந்த நிலையில், அவர்கள் மூவரும் தாமாகவே தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தனர். விசாரணையில், “போலீசார் மீது இருந்த கோபத்தில் இந்த செயலைச் செய்தோம்” என அவர்கள் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதையும் படிங்க: தமிழகமே ஷாக்...!! - நெல்லையில் அடினோ வைரஸ் காய்ச்சலால் 4 வயது சிறுமி பலி?... களத்தில் இறங்கிய சுகாதாரத்துறை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share