பரபரப்பு...!! நடுக்கடலில் மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... முகம் முதல் உடல் முழுவதும் கருகிய கொடூரம்... நடந்தது என்ன?
நடுக்கடலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீது நெல்லை மாவட்டம் கூத்தங்குழி மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி வழியாக தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்த மீனவர்கள் நடுக்கடலில் வைத்து தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் இதில் படகில் இருந்த பெரிய ராசு என்ற மீனவருக்கு உடலில் முகத்தில் தீக்காயம் படகில் இருந்த வலைகள் தீயில் எரிந்து சேதம் நடுக்கடலில் தருவைகுளம் மீனவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு.
தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் சின்னம் காரணமாக ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஏராளமான படகுகள் கரை திரும்பி வருகின்றன
தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் சுரேந்திரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இன்று மாலை 5 மணி அளவில் கன்னியாகுமரி கடல் பகுதி வழியாக கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர் படகில் பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இருந்துள்ளனர் இந்த நிலையில் நடுக்கடலில் படகு வந்து கொண்டிருக்கும் போது இவர்கள் படகை நோக்கி நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் பைபர் படகில் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: " விரைவில் அவர்கள் தலை துண்டிக்கப்படும்" - கடலம்மா மாநாட்டில் சீமான் ஆவேசம்...!
அதில் வந்த மீனவர்கள் திடீரென தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீது பெட்ரோல் கூண்டு உள்ளிட்ட வெடிப்பொருட்களை வீசியுள்ளனர் இதில் படகில் இருந்த பெரியராசு என்ற மீனவருக்கு உடலின் பின்பக்கம் மற்றும் முகத்தின் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து படகில் இருந்த மீனவர்கள் காயம்பட்ட மீனவருக்கு முதலுதவி அளித்துள்ளனர் இந்த பெட்ரோல் குண்டு தாக்குதலில் படகில் இருந்த வலைகள் மற்றும் படகும் சேதம் அடைந்து உள்ளது
இந்த நிலையில் சேதம் அடைந்த படகுடன் தூத்துக்குடி தருவைக்குளம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். நடுக்கடலில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீது நெல்லை மாவட்டம் கூத்தங்குழி மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நிம்மதி... நாகை மீனவர்கள் 31 பேர் விடுதலை... இலங்கை நீதிமன்றம் வைத்த செக்...!