×
 

பாக்., இசைக்கு ஏற்ப பாட்டு பாடும் காங்.,!! அசாம் பிரசாரத்தில் பிரதமர் மோடி அனல் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி, அசாம் மாநிலத்தில் பாகிஸ்தானுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுவதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பார்பெட்டா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். 

அப்போது அவர், “பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ பாகிஸ்தானின் இசைக்கேற்ப எப்போதும் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “நாட்டின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் பாஜக பணியாற்றி வருகிறது. குறுகிய கால நடவடிக்கைகளையே காங்கிரஸ் எப்போதும் மேற்கொள்கிறது. அதனால் அவர்கள் ஊழலில் ஈடுபட முடிகிறது. ஆனால் பாஜக முடிவுகளை எடுக்கும்போது, சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் தேவையான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு!! நமது இலக்கு 2047!! பிரதமர் மோடி சூளுரை!

பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுவது தேச பாதுகாப்பில் சமரசம் செய்வது என்றும், அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அசாமில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைதி ஒப்பந்தங்களை அமல்படுத்த பாஜக தரப்பில் நேர்மையான முயற்சிகளும், எண்ணற்ற தியாகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக அசாமில் அமைதி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அசாம் மாநில அரசின் பதவிக்காலம் மே 20ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் இந்தப் பிரசாரம் பாஜகவுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: சவாலான தருணங்களை இந்தியா எதிர்கொள்கிறது! மேற்காசிய போர் குறித்து பிரதமர் மோடி ஓபன் டாக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share