×
 

போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை எங்களது போராட்டம் இன்னும் வீரியமடையும் என CJP செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார்.

மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் வரை டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் தொடரும் என்றும், இனி வரும் நாட்களில் இப்போராட்டம் இன்னும் வீரியமடையும் என்றும் செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலில், செயற்பாட்டாளர் சவுரவ் தாஸ் அளித்த பேட்டியின் முக்கிய விவரங்கள். மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யாத வரை எங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது; இன்னும் கூடுதல் வீரியத்துடன் தொடரும்.

போராட்டத்திற்கு எதிராகப் பரப்பப்படும் விமர்சனங்கள் குறித்து அவர் பேசியதாவது இப்போராட்டம் தொடங்கியது முதலே எங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு எதிர்மறையானக் கருத்துருவாக்கங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. எங்களுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்றும், ஜார்ஜ் சொரோஸ் நிதி உதவி அளிக்கிறார் என்றும் பொய்யான அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.

இதையும் படிங்க: இது உங்கள் தனிப்பட்ட ராஜ்ஜியம் அல்ல மோடி! டெல்லி தடியடி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

இதுபோன்ற அவதூறுப் பரப்புரைகள் எதுவும் எங்களை ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. நாட்டின் கல்வி அமைப்பு எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கான உண்மைத் தரவுகள் எங்களிடம் உள்ளன. இந்தப் போராட்டம் முற்றிலும் உண்மைக்கானது.

கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவர்களின் அறப்போராட்டம் ஓயாது எனப் போராட்டக் குழுவினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆகணும் - மல்லிகார்ஜுன கார்கே!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share