×
 

புதுசு கண்ணா புதுசு... சிலிண்டர், பால் பாக்கெட்டுகளில் SIR விழிப்புணர்வு வாசம்..!

தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கிட்டு படிவத்தினை தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டீர்களா?

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.  ஆவின் மூலமாக எஸ்ஐஆர் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதன் பின்னணி என்ன? என விரிவாக பார்க்கலாம். 

நாடு முழுவதும்  எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநகராட்சிகள் முதல் குக்கிராமங்கள் வரை வீடு தேடி எஸ்ஐஆர் படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டிசம்பர் 4 வரை எஸ் ஐ ஆர் படிவங்கள் பணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படிவங்களை நிரப்புவதில் பொதுமக்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் உடனடியாக அதற்கென்று நியமிக்கப்பட்டுள்ள BLO அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் உரிய முறையில் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கி விட்டார்களா? என்பதை உறுதி செய்யும் விதமாகவும், அது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இதையும் படிங்க: SIR பணியின் போது தகராறு... திமுக -அதிமுகவினரிடையே கைகலப்பு...!

அதன் ஒரு பகுதியாக, எஸ்ஐஆர் விண்ணப்ப படிவங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன. அந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் கண்காணிப்பின் கீழ் ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரை வைத்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக அம்மாட்ட மாவட்ட ஆட்சியரும் சேலம், மாவட்ட தேரல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவுறுத்தலின் பெயரில் சேலம் மாவட்டங்களில் விநியோகிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்களில் எஸ்ஐஆர் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. 

ஆவின் பால் பாக்கெட்டிகளில் "தங்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கிட்டு படிவத்தினை தங்கள் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்து விட்டீர்களா?" என்ற வாசம் அச்சிடப்பட்டு வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதே போன்று சேலம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் சிலிண்டர்களிலும் SIR விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இறந்தவர்கள் பெயர் நீக்க திமுகவுக்கு என்ன பயம்? CV சண்முகம் சரமாரி கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share