நடுக்கடலில் பயங்கரம்... தமிழக மீனவர்கள் மீது வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு... வெறியாட்டம் ஆடிய இலங்கை கடற்கொள்ளையர்கள்...!
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவர் கிராமத்தை சேர்ந்த சந்திரபாபு, சசிகுமார் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகில் நேற்று மாலை மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது இந்திய எல்லைக்குள் புகுந்த கடல் கொள்ளையர்கள் கொடூர தாக்கு தாக்குதல் நடத்தியஉள்ளனர்
தமிழக மீனவர்கள் மீதுஅரிவாளைக் கொண்டும், வெடிகுண்டு வீசியும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சசிகுமார், உதயசங்கர், சிவசங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடுமையாக காயமடைந்து, முரத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி அவர்களிடமிருந்து என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், பிடித்த மீன்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றையும் கடல் கொள்ளையர்கள் பறித்துச் சென்றதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் சிவசங்கர் என்ற மீனவருக்கு இடது கையில் வந்து கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், தற்போது தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட 11 மீனவர்கள் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்து தற்போது முரத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: “இனி எந்த நிகழ்ச்சியும்...” - விஜய் எடுத்த அதிரடி முடிவு... தவெக மா.செ.க்களுக்கு திடீர் உத்தரவு...!
இந்த தாக்குதல் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக கடல் கொள்ளையர்கள் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது கடுமையான தாக்குதல் ஏற்படுத்தி வருவது மீனவ கிராமங்களுடைய ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து.. ம.பியில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு..!!