ரபேல் விமானம் குறித்து பொய்களை பரபப்பும் சீனா! பொங்கி எழுந்த பிரான்ஸ்! விற்பனையை தடுக்க சதியா?
ரபேல் விமானத்தின் செயல் திறன் குறித்து விவாதம் எழுந்தது. ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் நிறுவனம் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை மறுத்தது.
இந்திய விமானப் படையில் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் உள்ளன. கடந்த மே மாதம், ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து வான் வழி தாக்குதல் நடத்தியது. அதில் ரபேல் விமானங்களும் பயன்படுத்தப்பட்டன.சண்டையில் 5 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அதில் 3 ரபேல் விமானங்கள் என்றும் பாகிஸ்தான் கூறியது. இந்தியா விமான இழப்பை ஒப்புக்கொண்டாலும் எண்ணிக்கையை சொல்லவில்லை.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் இந்தியா போர் விமானத்தை இழந்ததை இந்திய முப்படைகளின் தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் ஒப்புக் கொண்டார்.
சிங்கப்பூரில் டிவிக்கு பேட்டியளித்த அனில் சவுகானிடம் இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? என கேட்கப்பட்டது. அதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார்.
இதையும் படிங்க: காந்தி பிறந்த மண் இது! பயங்கரவாதத்தை ஏற்காது! பிரிக்ஸ் மாநாட்டில் பாகிஸ்தானை பந்தாடிய மோடி!!
பாகிஸ்தான் சொல்வதில் உண்மை இல்லை. நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் என்பது முக்கியம் இல்லை. அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற காரணத்தை கண்டறிவது தான் முக்கியம். நம் தவறுகளை கண்டறிந்து, அவற்றை சரி செய்து மறுபடியும் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதல் நடத்தினோம். முன்பை விட நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தோம் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.
இந்திய விமானப்படை போர் விமானத்தை இழந்ததை அனில் சவுகான் ஒப்புக் கொண்டாலும் கூட எத்தனை போர் விமானம் என குறிப்பிட்டு சொல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தாவில் நடந்த கருத்தரங்கில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சில விமானங்களை இந்தியா இழந்தது என சொன்னார். விமானங்களை இந்திய விமானப்படை பறிகொடுத்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் கேப்டன் சிவகுமார் சொன்னார்.
போரில் பாகிஸ்தானுக்கு துருக்கியும், சீனாவும் உதவி செய்தன. அந்த நாடுகள் தந்த விமானங்கள் மற்றும் ஆயுதங்களையும் பயன்படுத்தின.சண்டை நிறுத்தத்துக்கு பிறகு ரபேல் விமானத்தின் செயல் திறன் குறித்து விவாதம் எழுந்தது. ரபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் நிறுவனம் பாகிஸ்தான் குற்றச்சாட்டுகளை மறுத்தது. தங்கள் நாட்டு போர் விமானங்களின் விற்பனையை சீர்குலைக்க சீனா முயற்சி செய்கிறது என பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் இப்போது குற்றம் சாட்டி உள்ளது.
இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; வெளிநாடுகளில் உள்ள சீன தூதரகங்கள் மூலம் ரபேல் விமானங்களின் தரம், செயல்பாடுகள் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதனால் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ள நாடுகள் ரபேல் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. ரபேல் விமானங்களின் செயல் திறன் குறைவு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை சமயத்திலேயே, சீனா சுமார் ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்கியது. அதன் மூலம் ரபேல் விமானத்தின் தரத்தை மட்டுப்படுத்தியும், சீன தொழில்நுட்பத்தின் மேன்மை குறித்தும் கருத்துகள் பகிரப்பட்டன. ரபேல் மட்டுமின்றி, பிரான்ஸ் அரசின் பாதுகாப்பு தொழில் துறை மீது வெளிநாடுகளுக்கு உள்ள நம்பகத் தன்மையை சீர்குலைக்க சீனா தவறான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது என்று பிரான்ஸ் குற்றம் சாட்டி உள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் ரெடி! இந்தியா மேல் திடீர் பாசம் காட்டும் பிலாவல் பூட்டோ..!