×
 

திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து..! விவசாயிகள், ஆசிரியர்களுக்கு ரிலீஃப்... முதல்வர் விஜய் அதிரடி..!!

சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் லைசன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் பயனாளர்கள் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்தார். மேலும் சென்னையில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்க 120 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவுச் சான்று பெற ஏற்படும் காலதாமதத்தை தடுக்க டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் என தெரிவித்துள்ள முதல்வர் விஜய், பிற மாநகராட்சிகளில் சாலைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்க நூற்று ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் குமரி கடற்கரை பகுதியை அழகுப்படுத்து ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கடலூர் கடற்கரையில் பாரம்பரிய நடைபாதை அமைக்க எட்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

குமரி கடற்கரை பகுதியை அழகுபடுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். கடலூர் கடற்கரையில் பாரம்பரிய நடை பாதை அமைக்க 8 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் விஜய் சட்டப் பேரவையில் வெளியிட்ட போது, விவசாயிகள் கைது செய்யப்பட்டதை முதல்வர் சுட்டிக்காட்டினார். அப்போது திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். வாழ்வாதாரத்திற்காக போராடிய விவசாயிகள் மீது மனிதநேயமற்ற முறையில் பதியப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு..! நல்ல செய்தி வரும் என அமைச்சர் ராஜ்மோகன் உறுதி..!!

விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் பரந்து ஊரில் போராடியவர்கள் மீதான வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். திருவண்ணாமலை மேல் மாசிப்காட் போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அப்போது நீட் போராட்ட வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று இந்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பாக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 4 முழ வேட்டியால் விவசாயிகள் பாதிப்பு... அவசரகதியில் மாற்றம்... பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share