பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!
டாஸ்மாக் மாடல் அரசால் சட்டம் ஒழுங்கு காவு வாங்கப்படுவதாக வானதி சீனிவாசன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆதி திராவிடர் மக்கள் வசிக்கும் இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் கண்ணில் படும் அனைவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிருப்தியை ஏற்படுத்தின.
ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்து பெட்ரோல் வெடிகுண்டு வீசியும், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய சூழ்நிலையில் மீண்டும் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனங்களை திமுக அரசுக்கு தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் திருநெல்வேலியில் கஞ்சா போதை கும்பல் இருவரை படுகொலை செய்த நிலையில், நேற்று சிவகங்கையில் மதுபோதையில் இருந்த கும்பல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் அரிவாளால் கொடூரமாக வெட்டித் தாக்கியுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். திறனற்ற திமுக ஆட்சியில் பெருகிவரும் சாராய விற்பனையாலும் கஞ்சா புழக்கத்தாலும் தமிழக மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து பலியிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் அவியல்... கமலாலயத்தில் சாம்பார்..!! மக்கள் பனையூர் பக்கம்... நாஞ்சில் சம்பத் உறுதி..!!
ஆனால், திமுகவின் ஆட்சியாளர்களோ ஐந்தாண்டுகளாகக் கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, தற்போது வெல்வோம் ஒன்றாக என்று தேர்தல் விளம்பரம் வெளியிட்டு மார்தட்டிக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். பாட்டிலுக்கு 10 ரூபாய் லஞ்சத்திற்கு ஆசைப்பட்டு, சட்டம் ஒழுங்கைச் சீரழித்து, கொலைகளின் கூடாரமாக மாற்றி, தங்கள் உயிருக்கே உலைவைத்த திமுக அரசை உருக்குலையச் செய்து, விரைவில் தமிழகத்தை மக்கள் மீட்பார்கள் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொட்டமும், ஆணவமும் கூடி போச்சு... சுயமரியாதையை சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!!