தமிழக அரசியலில் தனித்து விடப்பட்ட தவெக!! அதிரடி அரசியல் திருப்பங்களால் திணறும் விஜய்!! கைகொடுக்குமா தேர்தல்?!
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி, தமிழக அரசியலில் சலசலப்பை கிளப்பிய விஜய் தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். சைலண்ட் மோடுக்கு சென்றிருக்கிறார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மத்தியில் அமோக ஆதரவு பெற்ற விஜய், தனது ரசிகர் பட்டாளத்தை ஓட்டு வங்கியாக மாற்றும் நோக்கில் கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கிய பின்னர் நடைபெற்ற மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. ஆனால் அரசியல் களத்தில் தனித்து நின்று வெற்றி பெறுவது சவாலானது என்பதால், விஜய் கூட்டணி கதவை திறந்து வைத்தார்.
அவரது நிபந்தனைகள் எளிமையானவை: முதல்வர் வேட்பாளர் விஜய்தான். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு (பவர் ஷேரிங்) வழங்கப்படும். இந்த 'ஆட்சி பங்கு' வாக்குறுதிதான் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: டெல்லியில் இருந்து வந்த உத்தரவு!! விஜயை டீலில் விட்ட டிடிவி!! திடீர் யூ டர்ன்னுக்கு இதுதான் காரணம்!
திராவிட கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி பங்கு கொடுத்ததில்லை. "தேர்தலில் நின்றோம், ஜெயித்தோம்" என்ற நிலைப்பாட்டையே பின்பற்றி வந்தன. ஆனால் விஜய் இந்த நிபந்தனையை வைத்ததும், காங்கிரஸ் உட்பட பலர் இதை கையில் எடுத்தனர்.
காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை வலியுறுத்தி திமுகவுடன் சீட் பேரம் பேசியது. த.வெ.க.வை 'நேச கட்சி' என்று கூறி விஜய் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்தார். மறுபுறம், அமமுக தலைவர் டிடிவி தினகரனும் விஜய்யுடன் இணைய யோசித்ததாக பேசப்பட்டது.
டிடிவி "எடப்பாடி பழனிசாமி துரோகி" என்று கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், "தேர்தல் நேரத்தில் எதிரி யார், துரோகி யார் என்று தெரியாது. தமிழ்நாட்டின் நலனுக்காக யாருடன் கூட்டணி சரியோ அவர்களுடன் இணைவோம். கவுரவமான இடங்கள், ஆட்சி பங்கு கொடுப்பவர்களுடன் மட்டுமே கூட்டணி" என்று கூறியிருந்தார். "அமமுகவினர் அமைச்சர்களாக ஆவார்கள்" என்ற அவரது பேச்சு த.வெ.க.வுடன் இணைவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது டிடிவி தினகரன் அதிமுக - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். பியூஷ் கோயலை சந்தித்து இதை உறுதிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்கள் "எடப்பாடி துரோகி என்று சொல்லிவிட்டு அவரது கூட்டணியில் இணைகிறீர்களே?" என்று கேட்டபோது, "எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். மற்றபடி ஒன்றுமில்லை" என்று நழுவினார். இதனால் த.வெ.க.வின் கூட்டணி கனவு பலிக்காமல் போனது.
காங்கிரஸ் திமுகவுடன் சீட் பேரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. ராகுல் காந்தி விஜய் படத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், கூட்டணி விஷயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் "ஆட்சி பங்கு இல்லை" என்று திட்டவட்டமாக கூறி வருகின்றனர். தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும் என்டிஏவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விஜய் தனித்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவரது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. ரசிகர்கள் ஆதரவு இருந்தாலும், கூட்டணி இல்லாமல் வெற்றி பெறுவது சவாலாக உள்ளது.
தமிழக அரசியல் இப்போது திமுக vs என்டிஏ vs த.வெ.க. என்ற முப்பக்க போட்டியாக மாறியுள்ளது. விஜய் 'சைலண்ட் மோடு'க்கு சென்றுள்ள நிலையில், அவரது அடுத்த நகர்வு என்ன என்பதை ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெகவில் அடுத்தடுத்து அவமானங்களால் செங்கோட்டையன் அப்செட்!! எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?!