×
 

“லிஸ்ட் தயார்” அதிமுகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்... தமிழக பாஜகவின் பலே திட்டம்...!

எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக ஒருபோதும் விட்டு கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பெறவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக ஒருபோதும் விட்டு கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார். 

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுககூட்டணியிலிருந்து எஸ்டிபிஐ அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இந்நிலையில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையை செப்டம்பர் மாதம் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்காக பாஜக சார்பில் விரைவில் குழு அமைக்கப்பட உள்ளது. 

திமுக அரசை கண்டித்து நடைபெறும் போராட்டங்களை அதிமுக, பாஜக இணைந்து முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 40 சட்டமன்ற தொகுதிகள் வரை கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளை பாஜக பெற்ற நிலையில் இம்முறை 40 சீட்டுகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அதிமுகவுடன் இணைந்து பிரச்சாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஆதிமுகா கூட்டணியில் இடம்பெற்ற பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. 

இதையும் படிங்க: நெல்லை பக்கம் பார்வையைத் திருப்பிய இபிஎஸ்.. அதிதீவிர பயத்தில் அதிமுக ர.ர.க்கள்...!

அப்போது மத்தியில் பாஜக ஆட்சி தமிழகத்தில் அதிமுக ஆளுங்கட்சிகளாக இருந்ததால் இரட்டை இலக்க வெற்றியை பாஜக மேலிடம் எதிர்பார்த்தது. ஆனால் நான்கு தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், பாஜகவின் ஓட்டு வங்கி 3% இருந்து 11%ஆக உயர்ந்தது. தற்போது அனைத்து தொகுதியிலும் பாஜகவுக்கு நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளனர். எனவே வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட பாஜக விரும்புகிறது. இதனால் 40 சீட்டுகளை கேட்க பாஜாகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்த அதிமுக... அரக்கோணம் சம்பவத்தில் புதுரூட் எடுத்த எடப்பாடி பழனிசாமி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share