தொக்காக சிக்கிய திமுக! அன்பில் மகேஷுக்கு சிக்கல்! தனியார் பள்ளிகள் அங்கீகார விவகாரத்தில் வசூல் அம்பலம்!
அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அளித்த புகாரால், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் பெரும் முறைகேடு நடந்துள்ளது பொதுவெளியில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்கள் கூறியதாவது, “தமிழகத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் பெற முந்தைய ஆட்சியில் ஒரு பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் அங்கீகாரம் பெற்றுள்ளோம்” என்றனர்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பினாமிகள் மூலம் டெண்டர் முறைகேடு! முதல்வர் விஜய் ஸ்மார்ட் முவ்! சிக்கப்போகும் தலைகள்?!
இந்தப் பேட்டியின் மூலம் கடந்த ஆட்சியில் தனியார் பள்ளி அங்கீகாரம் வழங்குவதில் நடைபெற்ற ஊழல் அம்பலமாகியுள்ளது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது, அப்போதைய அமைச்சர் மகேஷுக்கு நெருக்கமான மூவரணி இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஒருவர், அமைச்சரின் நெருங்கிய உறவினர் ஒருவர் (அவரது பி.ஏ.), மற்றும் தி.மு.க. செய்தி தொடர்புக் குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த ஒருவர் ஆகியோர் இணைந்து லஞ்சம் வசூலித்துள்ளனர்.
ஆசிரியர் பணியிட மாறுதல், ஸ்மார்ட் வகுப்பறை திட்டம், தனியார் பள்ளி அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அலுவலகத்தை வைத்து இந்த வசூலை மேற்கொண்டனர். லஞ்சம் வாங்கிய பின்னரும் அங்கீகாரத்தை வழங்காமல் இழுத்தடித்ததால் தனியார் பள்ளி நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதன் விளைவாகவே அவர்கள் வெளிப்படையாக பேட்டி அளித்துள்ளனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முன்னாள் அமைச்சர் மகேஷுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசு இந்த முறைகேடுகளை தீவிரமாக தோண்டி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தமிழகத்தில் கல்வித்துறையில் நிலவிய ஊழலை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் தனி தீர்மானம்..! முழு ஆதரவு... கிரீன் சிக்னல் காட்டிய திமுக..!!